(என்.வீ.ஏ.)
இந்த வருடம் நடைபெறும் முதல் இரண்டு மாஸ்ட்ர்ஸ் தொடர்களான இண்டியன் வெல்ஸ் மற்றும் மியாமி பகிரங்க டென்னிஸ் ஆகிய போட்டிகளிலிருந்து சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் விலகிக்கொண்டுள்ளார.
அமெரிக்காவில் அமுலில் உள்ள கடுமையான கொரோனா தொற்று சுகாதார விதிகள் காரணமாக அவர் இந்த இரண்டு போட்டிகளையும் தவிர்க்க தீர்மானித்துள்ளார்.
அமெரிக்க பிரஜைகளல்லாத எவரும் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்பது அந் நாட்டிலுள்ள கடுமையான சுகாதார விதிகளில் ஒன்றாகும்.
கொவிட் - 19 தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவில்லை என பிபிசி செய்திச் சேவைக்கு கடந்த மாதம் நோவாக் ஜோகோவிச் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இண்டியன் வெல்ஸ், மியாமி பகிரங்க டென்னிஸ் ஆகிய இரண்டு போட்டிகளுக்குமான குலுக்கலில் (ட்ரோ) ஜோகோவிச் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.
ஆனால், அப் போட்டிகளில் பங்குபற்ற தன்னால் பயணிக்க முடியாது என்பதை அறிந்திருந்ததாக ஜோகோவிச் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியிலிருந்து ஜோகோவிச் விலகிக்கொண்டதால் போட்டித்தன்மை சமமாக இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.
இண்டியன் வெல்ஸ் போட்டியில் அவர் இரண்டாம் நிலை வீரராக நிரல்படுத்தப்பட்டிருந்தார்.
இதேவேளை, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மொன்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM