சூடானில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் ஏராளமான பழங்குடி இனத்தவர்கள் வாழந்து வருகின்ற நிலையில், அவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் சூடானின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோங்லே மாகாணத்தின் துக் நகரில் பழங்குடியினத்தை சேர்ந்த இரு பிரிவினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட ஒரு பிரிவினருக்கு சொந்தமான கால்நடை பண்ணைக்குள் எதிர்த் தரப்பினர் புகுந்து கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
இதேவேளை, இந்த மோதலில் ஏராளமான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM