நீதிமன்ற அவமதிப்பு : ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

Published By: Digital Desk 4

09 Mar, 2022 | 09:12 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது முறைப்பாட்டினை எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி விசாரணைக்கு  அழைக்க  உயர் நீதிமன்றம் புதன்கிழமை (9) தீர்மானித்தது.

குறித்த வழக்கு தொடர்பில்  சிறைச்சாலை அதிகாரிகளால் ரஞ்சன் ராமநாயக்க   உயர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த வழக்கானது பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்களான  எஸ். துறைராஜா, யசந்த கோதாகொட  ஆகியோர் முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.

இதன்போது ரஞ்சன் ராமநாயக்க சார்பில் மன்றில் ஆஜரான  ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட , இந்த வழக்குடன் தொடர்புபட்ட  தனது சேவை பெறுநர் வெளியிட்ட கருத்து தொடர்பில், நீதிமன்றில் எந்த நிபந்தனைகளும் இன்றி தமது கவலையை பிரஸ்தாபிக்க  தனது சேவை பெறுநர் எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டார். குறித்த கருத்தை வெளியிடும் போது நீதிமன்றை அவமதிக்கும் எந்த எண்ணமும்  தனது சேவை பெறுநருக்கு இருக்கவில்லை என்பதே தனது சேவைப் பெறுநரின் நிலைப்பாடு எனவும் அது தொடர்பில் தெரிவிக்க  திகதியொன்றினை குறித்து தருமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட கோரினார்.

 இதனையடுத்து அது தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு  உயர் நீதிமன்றம்  ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரனிக்கு அறிவுறுத்தியது.

 இதனையடுத்து மற்றொரு கோரிக்கையை முன் வைத்த ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணி அனுர மெத்தேகொட, தனது சேவை பெறுநர்  இரு கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் ஒன்று  எதிர்வரும் 24 ஆம் திகதி வெளியாகும் நிலையில், அதன் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க அவருக்கு அனுமதியளித்து சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு உத்தரவிடுமாறு கோரினார்.

 இது குறித்து நீதிமன்றின் தீர்மானத்தை அறிவித்த பிரதம நீதியரசர், பிரதிவாதி ரஞ்சன் சிறையில் இருப்பது இந்த வழக்குடன் தொடர்புபட்ட விடயத்தால் அல்ல எனவும்  அதனால் அது குறித்த உத்தரவொன்றினை பிறப்பிக்க முடியாது எனவும், சிறைச்சாலைகள் சட்ட திட்டங்களுக்கு அமைய   செயற்படுமாறும் அறிவித்தார்.

 இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் வழக்கை மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.

இதற்கு முன்னர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பிலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 3 மாதங்கள் அவை நடவடிக்கையில் பங்குபற்றாமை காரணமாக அவர் பாராளுமன்ற உறுப்புரிமையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந் நிலையிலேயே கடந்த 2018 ஆம் ஆண்டு  அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பாராளுமன்றை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிக்க  நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் குழாம்  தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கருத்துக்களை மையப்படுத்தி  அப்போதைய உயர் நீதிமன்ற பதிவாளரால் , ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றை அவமதித்தமை தொடர்பிலான இந்த 2 ஆவது முறைப்பாட்டினை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31