(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் ஊடாக ஊடகவியலாளர்களினதோ அல்லது வேறு யாரினதும் சுதந்திரத்தை வரையறுக்க நாங்கள் எதிர்பார்ப்பதி்லலை.
அத்துடன் குறித்த நபரின் விருப்பத்துக்கு மாற்றமாக அவரின் தனிப்பட்ட தரவுகளை வேறு யாருக்கும் பயன்படுத்த முடியாது. அத்துடன் ஊழல் மோசடிகளை தடுப்பதாக இருந்தால் தரவுகள் டிஜிடல் மயமாக்கப்படவேண்டும் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) இடம்பெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேய இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் ஊடாக பேச்சு சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தனர். நாட்டில் பேச்சு சுதந்திரம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சமமாகும் நாட்டு பிரஜைகளைவிட அதிக சுதந்திம் ஊடகவியலாளர்களுக்கு இல்லை.
விக்டர் ஐவன் மற்றும் சரத் சில்வா வழக்கிலும அதுவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஊடகவியலாளர்களுக்கு சில வரப்பிரசாதங்கள் இருக்கின்றன. அந்த வரப்பிரசாதங்களை நாங்கள் பாதுகாப்போம். என்றாலும் அனைவருக்கும் சுதந்திரம் இருக்கின்றது.
அந்த சுதந்திரத்துக்கு வரையறை இருக்கின்றது. அந்த வரையறையின் முக்கியமான விடயம்தான் தனிப்பட்டவிடயங்கள். தனிப்பட்ட நபரின் உரிமைகளை இலகுவாக யாருக்கும் பெற்றுக்கொடுக்க முடியாது. அதனால் பாரிய விளைவுகள் ஏற்படலாம்.
அத்துடன் இந்த சட்டமூலம் ஊடகவியலாளர்களினதோ அல்லது வேறு யாரினதும் சுதந்திரத்தை வரையறுக்க நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அவ்வாறான ஒன்று இருக்குமானால், இதற்கு முன்னர் இந்த சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடும்போது எமக்கு தெரிவித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அத்துடன் இந்த சட்டமூலம் மிகவும் அத்தியாவசியம் என இரண்டு தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.
ஊழல் மோசடிகளை தடுப்பதாக இருந்தால் தரவுகள் டிஜிடல் மயமாக்கப்படவேண்டும். டிஜிடல் மயமாக்குதவதற்கு தேவையான தகவல்களை வழங்கும்போது அந்த தகவல்களை பாதுகாப்பது தொடர்பில் உறுதிப்பாடு அரசாங்கத்தினால் வழங்கவேண்டும். அது அரசாங்கத்தின் கடமை. அதனையே அரசாங்கம் இந்த சட்டமூலம் ஊடாக மேற்கொள்ள முயற்சிக்கின்றது.
அத்துடன் இந்த சடமூலத்தை நாங்கள் அனுமதித்துக்கொண்டால் இந்த வலயத்தில் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தை அனுமதிக்கொண்ட நாடாக நாங்கள் ஆகுவோம்.
இந்தியாகூட இன்னும் இந்த சட்டத்தை அனுமதித்துக்கொள்ளவில்லை. அத்துடன் இந்த சட்டமூலம் தொடர்பில் நல்ல யோசனைகள் இருக்குமானால் அதுதொடர்பில் கலந்துரையாட விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் இணங்கி இருக்கின்றார். இந்த சட்டமூலம் மக்களுக்கு ஏற்படும் நன்மை தொடர்பில் எதிர்க்கட்சி கதைக்கவில்லை..
நாட்டு மக்களின் தரவுகளின் பாதுகாப்பு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தாதவரை, அவர்கள் எந்த ஒரு இடத்துக்கும் சென்று செயற்ட அச்சப்படுகின்னர்.
இணைய வழி வியாபாரங்களை மேற்கொள்ள அச்சப்படுகின்றனர். வங்கிகளுக்கு சென்று தரவுகளை சமர்ப்பிக்க அச்சப்படுகின்றனர்.
அவர்களின் தனிப்பட்ட தரவுகள் பிழையாக பாவிக்கப்படுமா என்ற அச்சம் இருக்கின்றது. அந்த அச்சத்தை இல்லாமலாக்கவே தரவுகளை டிஜிடல் மயமாக்கி பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
இதன் மூலம் குறித்த நபரின் விருப்பத்துக்கு மாற்றமாக அவரின் தனிப்பட்ட தரவுகளை வேறு யாருக்கும் பயன்படுத்த முடியாது. அதனால் இதன் நன்மை நாட்டு மக்களுக்கே கிடைக்கின்றது. அதனால் இந்த சட்மமூலம் தொடர்பாக பொய் பிரசாரத்தை மேற்கொள்ளவேண்டாம் என்றார்.
இறுதியாக தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் செயற்குழுவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, திருத்தங்களுடன் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM