போலியான தங்க நகைகளை விற்பனை செய்து சுமார் 20 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரகாபொல பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வாரியகொட பிரதேசத்தில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 731 கிராம் 240 மில்லிகிராம் தங்கக்கட்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 25, 38 வயதுடைய அலவ்வ மற்றும் யக்கல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இதற்கு முன்னரும் இதே போன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் , இவர்களில் ஒரு சந்தேக நபர் ரம்புக்களை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொலை உள்ளிட்ட 6 குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM