டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த இங்கிலாந்தை மீட்டெடுத்த வீரர் 

09 Mar, 2022 | 05:03 PM
image

(என்.வீ.ஏ.)

அன்டிகுவா, நோர்த் சவுண்ட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான மேற்கிந்தியத் தீவுகளுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த இங்கிலாந்தை, 2 இணைப்பாட்டங்கள் மூலம் ஜொனி பெயார்ஸ்டோவ் மீட்டெடுத்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அலெக்ஸ் லீஸ் (4), ஸக் க்ரோவ்லி (8), அணித் தலைவர் ஜோ ரூட் (13), டான் லோரன்ஸ் (20) ஆகிய நால்வரும் ஆட்டமிழக்க இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை வெறும் 48 ஓட்டங்களாக இருந்தது.

இத்தகைய இக்கட்டான நிலையில் பென் ஸ்டோக்ஸ் (36), ஜொனி பெயார்ஸ்டோவ்   ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 5 ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு ஓரளவு நம்பிக்கை கொடுத்தனர்.

தொடர்ந்து பெயார்ஸ்டோவ்வும் பென் ஃபோக்ஸும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஃபோக்ஸ் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெயார்ஸ்டோவ் ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 

மறு முனையில் கிறிஸ் வோக்ஸ் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜேடன் சீல்ஸ் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெமர் ரோச் 71 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35