அரசாங்கம் ஜெனிவாவுக்கு பதிலளிக்கும் வரை ஜனாதிபதி ஆணைக்குழுவை செயற்படுத்த முடியாது - ரணில் 

09 Mar, 2022 | 05:27 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

உபாலி அபேரத்ன தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படுகின்றனர். 

என்றாலும் ஜெனிவா மனித உரிமை பேரவையில்  இந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான சட்டரீதியிலான தன்மை தொடர்பில் கேள்வி எழுப்பி இருக்கின்றது. 

அதனால் அரசாங்கம் இதற்கு பதிலளிக்கும்வரை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விசாரணைக்கு அழைப்பதில் பயன் இல்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) வரப்பிரசாத கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர்  தொடர்ந்து தெரிவிக்கையில்,

விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருமாறு எனக்கும் இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

என்றாலும் பாராளுமன்றத்துக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதற்காக, எனது சட்டத்தரணி ஊடாக அதுதொடர்பில் அறிவித்தேன். 

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்த பாதுகாப்பு பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். பாராளுமன்றம் கூட்டப்படும் திகதி தொடர்பாக ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவேண்டும். 

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கருத்து பெறவேண்டும் என்றால், ஒரே நேரத்தில் அனைவரையும் அழைக்காமல் தேவைக்கு ஏற்றவகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஆணைக்குழுவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி  அரசியல் பழிவாங்கல் தொடர்பான இந்த ஆணைக்குழுவை 2021 ஜனவரி 29 வர்த்தமானி அறிவிப்பு மற்றும் 2021 ஏப்ரல் 1ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரமே அமைத்திருக்கிறார். 

என்றாலும் இதனை அடிப்படையாகக்கொண்டிருப்பது இதற்கு முன்பிருந்த உபாலி அபேரத்ன தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாகும். 

என்றாலும் தற்போது இந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவை கேள்வி எழுப்பி இருக்கின்றது.

இதுதொடர்பிலான சட்ட ரீதியிலான பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றது. அதனால் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருக்கின்றது.

இந்த அறிக்கை அடிப்படையாக்கொண்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பின் செல்லுபடித்தன்மை என்ன என்பது பார்க்கவேண்டி இருக்கின்றது. 

ஆணைக்குழுவின் அறிக்கையை எடுத்துக்கொண்டு நபர்களை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைப்பது எவ்வாறு என்பதை அரசாங்கம் தெரிவிக்கவேண்டும். 

அத்துடன் இதுதொடர்பில் சர்வதேச பாராளுமன்றத்துக்கு தெரிவிக்கப்படும். அதனால் அரசாங்கம் இதுதொடர்பில் பதிலளிக்கும்வரை இந்த ஆணைக்குழுவை செயற்படுத்த முடியாது. 

உபாலி அபேரத்னவுக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கடந்த மாத அறிக்கையிலும் இதற்கு முன்னரான அறிக்கையிலும் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

எனவே இவ்வாறான நிலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னால் கொண்டுசென்று கேள்வி கேட்பதில் பயன் இல்லை. 

அதனால் வெளிவிவகார அமைச்சரும் நீதி அமைச்சரும் இதுதொடர்பில்  தெரிவிக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55