ரத்துபஸ்வல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒரு குற்றச்செயல் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பினை கம்பஹா நீதிமன்ற நீதவான் கவின்யா நாணயக்கார இன்று வெளியிட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ரத்துபஸ்வல வெலிவேரிய சந்தியில் குடிநீர் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதனால் மூவர் உயிரிழந்தனர்.

இதில் இருவர் துப்பாக்கிசூட்டிலும் ஒருவர் தட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டும் உயிரிழந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதவான் உத்தரவிட்டார்.