நடிகை ஸ்ரேயா சரணின் 'கப்ஜா' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

09 Mar, 2022 | 12:50 PM
image

நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பில் தயாராகிவரும் 'கப்ஜா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

Actress Shriya Saran Interrogated by Police in London - TheNewsCrunch

கதாசிரியரும், இயக்குநருமான ஆர். சந்துரு இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கப்ஜா'. இதில் கன்னடத்தின் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். 

நடிகை ஸ்ரேயா சரண் மதுமதி என்ற சரித்திர காலகட்டத்திய மகாராணி வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, கபீர் துகான் சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

Prakash Raj Shows His Gratitude Towards Samuthirakani By Dedicating His  Award - YouTube

ஏ ஜே ஷெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு,' கே ஜி எஃப்' பட புகழ் இசையமைப்பாளர் ரவி பர்ஸூர் இசையமைக்கிறார்.

கன்னட மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,ஒரியா, மராத்தி, இந்தி என ஏழு மொழிகளிலும் ஒரே தருணத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்ரீ சித்தேஸ்வரா என்டர்பிரைசஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சந்திரசேகர் தயாரிக்கிறார்.

இந்த ஆண்டிற்குள் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் 'கப்ஜா' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை ஸ்ரேயா சரண் மகாராணி தோற்றத்தில் கம்பீரமாகவும், அந்தக் காலகட்டத்திய ஆடை அணிகலனுடன் தோன்றுவதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00
news-image

நடிகை அஞ்சலி நடிக்கும் 'ஈகை' பட...

2023-05-30 12:43:42
news-image

‘எல். ஜி. எம்' படத்தின் செகண்ட்...

2023-05-30 12:37:36
news-image

'வீரன்' படத்தில் நடித்ததை விட கற்றது...

2023-05-30 12:37:09
news-image

அஜித் குமாருக்கு ஜோடியாகிறாரா திரிஷா...!?

2023-05-30 12:34:40
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51