புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான 76 விண்ணப்பங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதிய விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், அவை குறித்து தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

தேர்தல்கள் திணைக்களத்தில் ஏற்கனவே 79 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.