ஜெனிவாவில் 31 நாடுகள் இலங்கைக்கு சாதகமாக உள்ளன - அரசாங்கம்

Published By: Digital Desk 3

08 Mar, 2022 | 09:28 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31 அங்கத்துவ நாடுகள் சாதகமாகவே நோக்கியுள்ளன.

அதற்கமைய இலங்கை மனித உரிமைகளையும் , அடிப்படை உரிமைகளையும் மதிக்கும் நாடு என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள் உணர்ந்து கொள்ளும் என்று நம்புவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் பொறுப்புகூறல் , நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல்ஸ் பச்லெட்டின் அறிக்கை மீதான விவாதத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன்  உள்ளிட்ட நாடுகள் அரசியல் தீர்வு, சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதற்கு தலையிடுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். 

அத்தோடு முன்னெப்போதுமில்லாத வகையில் இலங்கை மக்களின் மனித உரிமைகள் மிகுந்த அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் , ஷானி அபேசேகர மற்றும் ரவி செனெவிரத்னவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் ஹரீன் பெர்னாண்டோ எம்.பி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இலங்கை மீது தொடர்ந்தும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களால் சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு உள்ளாக நேர்ந்தால் , அதனை எவ்வாறு அரசாங்கம் எதிர்கொள்ளும் என்று நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் அரசாங்கமாகும். அது தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. மனித உரிமைகள் பேரவையின் 45 அங்கத்துவ நாடுகளில் 31 நாடுகள் இலங்கை அரசாங்கம் என்ற ரீதியில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னெடுத்துள்ள சாதக தன்மைகள் தொடர்பில் வரவேற்று பேசியுள்ளன. இது மிகவும் சிறந்த முன்னேற்றமாகும்.

காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள சுமார் 14 000 இற்கும் அதிக முறைப்பாடுகள் இலங்கை பிரஜைகளாவர். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் என எந்த இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருந்தாலும் அவர்கள் காணாமல் போயுள்ளனர். 

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவை இடம்பெற்றிருக்கின்றன. தென் மாகாணத்தில் 1980 களில் காணாமல் போனோரும் உள்ளனர்.

இதற்கிடையில் பல அரசாங்கங்கள் நாட்டை ஆட்சி செய்துள்ளன. எனினும் இன்று எமது ஆட்சியில் அதற்கான உறுதியான தீர்வினை வழங்கி , பொறிமுறையொன்றை கட்டியெழுப்பி அதனை துரிதப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மனித உரிமைகள் பேரவையிலுள்ள நாடுகளுக்குள்ளும் இது தொடர்பில் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இதனை ஒரு கறுப்பு பகுதியாகப் பார்க்க நாம் விரும்பவில்லை. அவர்கள் இதனை தெரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43