முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிட்ட நால்வர் கைது

08 Mar, 2022 | 09:27 PM
image

(எம்.மனோசித்ரா)

வத்தளை, கம்பஹா, ஜாஎல உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் 9 முச்சக்கரவண்டிகள் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை கொள்ளையிட்டு விற்பனை செய்தமை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கம்பஹா பொலிஸ் தலைமையகத்திற்கு அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வு பிரிவின் அதிகாரியொருவரால் முச்சக்கரவ வண்டிகளை கொள்ளையிடும் சந்தேகநபர்கள் தொடர்பில் இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த சந்தேகநபர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை  6 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர்கள் 32 மற்றும் 33 வயதுகளையுடைய உடுகம்பொல மற்றும் மாகவிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்பது தெரியவந்துள்ளது. 

இவர்களால் வத்தளை, கம்பஹா, ஜாஎல உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் கொள்ளையிடப்பட்ட 9 முச்சக்கரவண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதே போன்று இவர்களால் கொள்ளையிடப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டிகள் கனேமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டிகளை பெற்றுக் கொண்ட வாகனங்களை பழுதுபார்க்கும் நிலைய உரிமையாளர் அவற்றின் நிறம் உள்ளிட்டவற்றை மாற்றி , விற்பனை செய்வதற்காக பிரிதொருவருக்கு வழங்கியுள்ளார். 

அந்நபரால் குறைந்த விலைக்கு குறித்த முச்சக்கரவண்டிகள் ஏனைய நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன இது தொடர்பில் கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே போன்று முச்சக்கரவண்டிகளை விற்பனை செய்த 34 வயதுடைய ராகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த 4 சந்தேகநபர்களும் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நபர்களிடமிருந்து தமது வாகனங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு முச்சக்கரவண்டி உரிமையாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா :...

2025-03-19 12:56:38
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55