ஜனாதிபதி கலந்துக்கொண்ட நிகழ்வொன்று இடம்பெற்ற அனுராதபுரம் - சல்காது விளைாயட்டு மைதானத்திற்கு அருகில், பாரவூர்தியொன்றிலிருந்து துப்பாக்கி ரவையொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த மைதைானத்தில் நேற்று (13) ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த மைதானத்துக்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த பாரவூர்தியொன்றை சோதனையிட்ட போது குறித்த வாகனத்திலிருந்து துப்பாக்கி ரவை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பாரவூர்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.