ஜனாதிபதியின் நுகே‍கொடை இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்துவது வருந்தத்தக்க விடயமாகும் - மஹிந்தானந்த அளுத்கமகே

Published By: Digital Desk 3

08 Mar, 2022 | 02:21 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

அதிக செலவு ஏற்படும் என கருதி ஜனாதிபதி மாளிகையை பயன்படுத்தாது,  நு‍கேகொடையிலுள்ள அவரது சொந்த இல்லத்தை வாசஸ்தலமாக பயன்படுத்தி வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நுகே‍கொடை இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்துவது வருந்தத்தக்க விடயமாகும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

"ஜனாதிபதி மாளிகையை ஜனாதிபதியின் பயன்பாட்டுக்காக  பில்லியன் கணக்கான ரூபா நிதியை ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி செயலகத்திற்கு 1.5 பில்லியன் ரூபாவை  நாட்டுக்கு மிச்சப்படுத்திக் கொடுத்துள்ளார். மேலும், அவரின் ‍ போக்குவரத்திற்காக 25 வாகனங்கள் பயன்படுத்த முடியுமென்ற போதிலும் , வெறுமனே 3 வாகனங்களை  மாத்திரமே பயன்படுத்தி வருகிறார். 

தற்போது நாட்டில் எந்தளவு தூரத்திற்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்றால், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவிற்கு  நாட்டு மக்களுக்கு உரிமை  கொடுக்கப்பட்டுள்ளது. 

இப்படிப்பட்ட ஜனநாயக தலைவர் மக்களுக்காக தியாகம் செய்யும் போது, சில்லறைத்தனமான வேலைகளில் ஈடுபடும்  எதிர்கட்சியினர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று போராட்டம் நடத்துவது கவலையளிக்கக் கூடிய  விடயமாகும்" என்றார். 

கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் தோன்றியுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ‍குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08