'நாரி சக்தி புரஸ்கார்' விருதுகள் பெறும் பெண்களை சந்தித்தார் இந்தியப் பிரதமர் மோடி

08 Mar, 2022 | 02:56 PM
image

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வழங்கப்படும் மத்திய அரசின் 'நாரி சக்தி புரஸ்கார்' விருதுக்கு தேர்வாகியுள்ள பெண்களுடன், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று மார்ச் 8 கொண்டாடப்படுகிறது. 

ஆண்டு தோறும் மகளிர் தினத்தையொட்டி மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தொழில், விவசாயம், புதுமை, சமூகப் பணி, கல்வி மற்றும் இலக்கியம், மொழியியல், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை ஊக்குவிக்கும் வகையில் 'நாரி சக்தி புரஸ்கார்' விருது வழங்கப்படுகிறது.

இதன்படி, 2020 மற்றும் 21ம் ஆண்டுகளில் தலா 14 பேர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர் இவர்களுக்கு, இன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்க உள்ளார்.

விருது பெறும் கடற்படை கேப்டன் ராதிகா மேனன், தொழில் முனைவோர் அனிதா குப்தா, இயற்கை விவசாயி மற்றும் பழங்குடியின ஆர்வலர் உஷாபென் தினேஷ்பாய் வாசவா, இன்டெல்- இந்தியா நிறுவன தலைவர் நிவ்ருதி ராய். மாற்றுத்திறனாளி கதக் நடன கலைஞர் சைலி நந்த்கிஷோர் உள்ளிட்டோர் நேற்று டெல்லி வந்தனர். அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

ஆண்டுதோரும்  மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி மத்திய அரசு ஆறு தேசிய விருதுகளை வழங்குகிறது. 

பெண்களின் முயற்சி மற்றும் சிறந்த பங்களிப்புக்காக வழங்கப்படும் இந்த விருதுகளை ஸ்ரீ சக்தி புரஸ்கார் விருது என்று அழைக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ராவணன், ராட்சசன், ஹிட்லர்... என்னை விமர்சிப்பதில்...

2022-12-01 17:06:54
news-image

இந்தியாவின் கதையை பகிர ஜி-20 தலைமை...

2022-12-01 16:39:10
news-image

தென் ஆபிரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு...

2022-12-01 15:54:26
news-image

கொவிட் கட்டுப்பாடுகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்த...

2022-12-01 15:11:13
news-image

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபு ஹசன்...

2022-12-01 14:42:12
news-image

இந்தியா - கயானா சந்திப்பு :...

2022-12-01 14:11:24
news-image

நியூ ஸிலாந்து, பின்லாந்து பிரதமர்களின் சந்திப்புக்கு...

2022-12-01 13:21:36
news-image

இந்தியா - லாட்வியா பிரதிநிதிகள் சந்திப்பு:...

2022-12-01 16:15:14
news-image

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9...

2022-12-01 09:21:37
news-image

ஆப்கான் குண்டுவெடிப்பில் 16 பேர் பலி

2022-11-30 16:39:17
news-image

மிஸ் ஏர்த் 2022 அழகுராணியாக தென்கொரியாவின்...

2022-11-30 16:14:08
news-image

மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தைக்கு 107...

2022-11-30 16:36:12