பெண்கள் தடையை மீறி வெளியில் எதையும் சாதிக்கலாம் - கலா மாஸ்டர்

08 Mar, 2022 | 02:41 PM
image

பெண்கள் தடையை மீறி வெளியில் வாருங்கள் பெண்கள் சாதிக்க முடியாது என எதுவுமில்லை. எதையும் சாதிக்கலாம் என இந்திய திரைப்பட நடன இயக்குனரும், மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சி தொகுப்பாளருமான கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அவர் மகளிர் தின வாழ்த்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உங்களுடைய திறமை வெற்றியடையும் வரை குடும்ப ஆதரவு  கொடுக்கமாட்டார்கள் அதையும் மீறி நாங்கள் வெற்றியடைவது தான் பெண்களின் திறமை ஏனெனில் நடனத்துக்கு தேவையானது.  ஒழுக்கம், நேர்மை, திறமையை வெளிப்படுத்தினாலே   நமக்கு வெற்றி நிச்சயம். 

பெண்களுக்கு நடனக்கலையில் தடையாக இருப்பது குடும்பமாய் இருக்கலாம் என நினைக்கின்றேன். 

பெண்கள் வீட்டுக்குள் மட்டும் தான் நடனம் ஆடுவேன் வெளியில் ஆடினால் நிறையபேர் பார்ப்பார்கள் என்று வெட்கப்படுவார்கள். இதனை மீறி வெளியில் வாருங்கள் பெண்கள் சாதிக்க முடியாது என எதுவுமில்லை. எதையும் சாதிக்கலாம்.  

நடன கலைஞர்களுக்கு எனது சிறிய அறிவுரை மன தைரியம் வேண்டும். எந்த தடையையும் தகர்த்து வெளியில் வந்து  வெற்றியடைவது தான் பெண்களின் திறமை.  

எல்லா பெண்களுக்கும் நான் கூற வேண்டியது என்னவெனில் நாம் தைரியமாக இருக்க வேண்டும், எங்களால் முடியாதது எதுவுமே இல்லை. 

எதையும் சாதிக்க முடியும். ஆரம்பத்தில் பெண்கள் முன் வருவது குறைவாக இருந்தது.  தற்போது ஆண்களுக்கு சரிநிகராக பெண்கள் முன்வருகின்றார்கள். 

எமது சினிமா துறையில் ஆரம்பத்தில் இரண்டு பேர் ஆனால் தற்போது 50 வீதம் பெண்கள் இருக்கிறார்கள்.

சாதிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் சாதித்து காட்டுங்கள், உங்கள் இலக்குகளில் வெற்றியடையுங்கள்.

வாழ்க்கை என்பது ஒருமுறைதான் அதில் நாம் வெற்றியடைந்து நிமிர்ந்து நின்று நாம் யார் என்பதை காண்பிக்க வேண்டும். 

அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விநியோகச் சிக்கல்கள்  - அமைச்சரவை...

2026-03-17 15:04:48
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-17 14:42:31
news-image

கிளிநொச்சி கடற்பரப்பில் 78 கிலோ போதைப்பொருள்...

2026-03-17 14:48:13
news-image

இலங்கையில் UPI கட்டண முறை விரிவாக்கம்...

2026-03-17 14:29:11
news-image

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலத்தை புனரமைக்க...

2026-03-17 14:10:02
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-03-17 13:40:17
news-image

மாற்றுக் கொள்கையும் மாற்றுத் திட்டமுமே எமது...

2026-03-17 13:32:31
news-image

எரிபொருள் QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமையும்...

2026-03-17 13:08:19
news-image

தேயிலை பைகளில் மறைத்து வைத்து ஹெரோயின்...

2026-03-17 13:26:01
news-image

மத்தியக்கிழக்கு போரால் சுற்றுலாத்துறைக்கு நாளொன்றுக்கு 5...

2026-03-17 13:43:41
news-image

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க கியூ ஆர்...

2026-03-17 12:22:03
news-image

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு :...

2026-03-17 12:05:15