இந்தியத் தலைநகர் டில்லியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஓடும் பேருந்தில் ஐவர் கொண்ட குழு பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதில் ஒருவரின் விடுதலைக்கு எதிராக இந்திய உச்சநீதி மன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை நிராகரித்துவிட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் குற்றச்செயல் இடம் பெற்ற போது, அந்த நபருக்கு 17 வயது என்பதால், இந்திய சிறார் தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக் காலம் முடிவடைந்து அவர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக பெண்கள் அமைப்பு ஒன்று மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில்விடுவிக்கப்பட்ட நபரை தொடர்ந்து தடுத்துவைக்க சட்டத்தில் இடமில்லை என்று கூறி நிராகரித்தது.
அவர் இந்த மாதத்தின் முற்பகுதியில் விடுவிக்கப்பட்டு, அறக்கட்டளை ஒன்றின் பரமாரிப்பில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த பாலியல் வன்செயலில் ஈடுபட்ட இதர நான்கு ஆடவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது நபர் சிறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM