சேதமாக்கப்பட்ட  ஊடகவியலாளரின் புகைப்படகருவி - பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Published By: Digital Desk 4

07 Mar, 2022 | 02:53 PM
image

செய்தி சேகரித்து கொண்டிருந்த  வவுனியா ஊடகவியலாளளரின் புகைப்படகருவி அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாகாமேலும் தெரியவருவதாவது,

வவுனியா குருக்கள்புதுகுளம் பகுதியில் நேற்று (06) காலை இடம்பெற்ற விபத்தில் தந்தை சம்பவ இடத்திலையே பலியாகியதுடன் மகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்திருந்தார். இதனையடுத்து ஆவேசம் அடைந்த  குறித்த பகுதி மக்கள் பேருந்தினையும் தாக்கியிருந்தனர். 

குறித்த சம்பவத்தினை செய்தி சேகரித்து கொண்டிருந்த  வவுனியா மாவட்ட ஊடகவியலாளரின் 1,40,000 ரூபா பெறுமதியான புகைப்பட கருவியினை குறித்த பகுதிமக்கள் பறிக்க முற்பட்டதோடு,  புகைப்பட கருவியினையும்  அடித்து சேதப்படுத்தியுள்ளார்கள். 

இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரான இராசையா ஜெயசங்கரால் பூவரசங்குளம் பொலிஸில் முறைப்பாடொன்றினை பதிவுசெய்துள்ளார்.  முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து  இது தொடர்பில்  பூவரசங்குள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 

குறித்த சம்பவத்தில் குருக்கள் புதுக்குளம் பகுதியை சேர்ந்த பு.சிறிதரன் (46), மற்றும் அவரது மகனான  சிறிதரன் டினோகாந் (14) ஆகியவர்களே விபத்தில் மரணமடைந்தவர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஒடுக்குமுறைப்போக்கை தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கிறது ருஷ்டியின்...

2025-06-22 13:10:38
news-image

குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு...

2025-06-22 13:08:11
news-image

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித...

2025-06-22 13:02:04
news-image

கட்டுநாயக்கவில் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

2025-06-22 13:06:03
news-image

பல்துறைசார் வாய்ப்புக்கள் குறித்து ஆராய முன்வாருங்கள்...

2025-06-22 13:03:51
news-image

செம்மணி மனிதபுதைகுழி பகுதிக்கு செல்வதற்கு ஐநா...

2025-06-22 12:36:49
news-image

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ்...

2025-06-22 12:38:09
news-image

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை...

2025-06-22 11:58:41
news-image

ஈரானில் 37 இலங்கையர்கள் உள்ளனர் ;...

2025-06-22 12:02:33
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் கைக்குண்டு, போதைப்பொருளுடன் சந்தேக நபர்...

2025-06-22 12:03:12
news-image

மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா?...

2025-06-22 11:22:24
news-image

கொஹுவல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...

2025-06-22 10:56:34