இணைய தலைமுறையின் காதலை பேசும் கவின்

07 Mar, 2022 | 05:56 PM
image

நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் இன்றைய இளம் தலைமுறையினரின் காதல் மையப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் தயாராகி வரும் முதல் பெயரிடப்படாத திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகரும், பிக் பொஸ் பிரபலமுமான கவின் நடிக்கிறார். 

Bigg Boss Tamil fame Kavin turns nostalgic; read post - Times of India

இவருக்கு ஜோடியாக 'பீஸ்ட்' பட புகழ் நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

கே. எழில் அரசு  ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். 

'மனங்கொத்தி பறவை', 'தேசிங்கு ராஜா', 'ஜிப்ஸி' ஆகிய படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' 2k கிட்ஸின் ரசனைக்கு ஏற்ற வகையில் காதல் கதையாகவும், கேளிக்கை அம்சங்களுடன் கூடிய திரைக்கதையாக உருவாகி இருக்கிறது.

இளைய தலைமுறையினரையும், இணைய தலைமுறையினரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் காதல் உணர்வு இந்த திரைக்கதையில் கையாளப்பட்டிருக்கிறது'' என்றார்.

Aparna Das role in Thalapathy Vijay's Beast revealed! - Tamil News -  IndiaGlitz.com

'நட்புன்னா என்னன்னு தெரியுமா' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், 'லிஃப்ட்' என்ற படத்தின் வெற்றிக்குப் பிறகு வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணி நடிகராக முன்னேறிக் கொண்டிருக்கும் இளம் நடிகரான கவின், 'பீஸ்ட்' பட புகழ் நடிகை அபர்ணா தாஸ் இருவரும் இணைந்திருப்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலிடத்தை பிடித்த தனுஷ்

2022-12-08 11:57:54
news-image

தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன்- விஷ்ணு விஷால்

2022-12-08 13:08:34
news-image

புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்

2022-12-08 11:09:50
news-image

யோகி பாபு நடிக்கும் 'மலை' படத்தில்...

2022-12-08 11:04:20
news-image

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ...

2022-12-08 10:43:40
news-image

மண வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய ஹன்சிகா

2022-12-07 12:31:12
news-image

பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் டீசர்...

2022-12-07 11:16:56
news-image

நயன்தாரா நடித்திருக்கும் 'கனெக்ட்' திரைப்படத்தின் முன்னோட்ட...

2022-12-07 11:14:53
news-image

புதுமுகங்கள் நடிப்பில் தயாரான 'Hi 5'...

2022-12-07 11:04:39
news-image

திரைக்கு வரும் ‘அனல்’

2022-12-06 18:19:32
news-image

நடிகர் கன்னா ரவி நடித்திருக்கும் 'ரத்த...

2022-12-06 11:56:16
news-image

இயக்குநர் பா. ரஞ்சித் பாராட்டிய 'காலேஜ்...

2022-12-06 11:55:41