அமானா வங்கி தனது சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வங்கிச் சேவையை பிஸ்னஸ் ப்ளஸ் உடன் வலிமைப்படுத்தியுள்ளது

Published By: Digital Desk 3

07 Mar, 2022 | 01:04 PM
image

தனது மூலோபாயத்திற்கமைவாக பிஸ்னஸ் ப்ளஸ் தீர்வின் அறிமுகத்தினூடாக அமானா வங்கி தனது சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை வங்கியியல் பிரிவை வலிமைப்படுத்தியுள்ளது. 

வியாபாரங்களுக்கு தமக்கு அவசியமான நிதித் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் மன நிம்மதியை வழங்கி, தமது வியாபார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு அவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.

வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கான தீர்வு பற்றி கருத்துத் தெரிவிக்கையில், 

“பொருளாதாரத்தை வலுப்படுத்தி முன்நோக்கி நகர்த்துவதில் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் முக்கிய பங்காற்றுகின்றன. 

இதன் காரணமாக இந்தத் துறையில் அமானா வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்துவதுடன், அண்மைக் காலத்தில் எழுந்திருந்த பாரியளவு சவால்களுக்கு மத்தியிலும் ஆதரவளித்திருந்தது. 

சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு எதிர்காலத்தில் உறுதியான கூட்டாண்மை நிறுவனங்களாக வளர்ச்சியடைவதற்கு அவசியமான ஆக்கபூர்வமான மற்றும் உரிய காலப்பகுதியில் உதவிகளை வழங்கி, அவற்றின் நம்பிக்கையை வென்ற பங்காளராக திகழ்கின்றோம். 

இந்தப் பிரிவில் ஈடுபாட்டைப் பெறுவதற்கான சிறந்த கமோக பிஸ்னஸ் ப்ளஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்காக பிரத்தியேகமான உறவு பேண் முகாமையாளரையும் கொண்டுள்ளது. 

வழங்கப்படும் ஏனைய சேவைகளில் உள்ளடங்கலாக, தனது இருப்பிடத்துக்கு வருகை தரும் வங்கிச் சேவை, முன்னுரிமை அடிப்படையிலான கட்டணமிடல், வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட காசோலைப் புத்தகங்கள், சம்பளக் கொடுப்பனவு கட்டமைப்பு (payroll) தீர்வுகள் மற்றும் பல அம்சங்கள் அடங்கியுள்ளன.” என்றார். 

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “நாம் பின்பற்றும் பிரத்தியேகமான வங்கியியல் மாதிரியினூடாக, இடர்களையும் வெகுமதிகளையும் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். 

வங்கியுடன் ஈடுபாடு மற்றும் நம்பிக்கையுடனான உறவை பேண எதிர்பார்க்கும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகளுக்கு சிறந்த பொருத்தப்பாடாக இது அமைந்துள்ளது. எம்முடன் கொடுக்கல் வாங்கல்களை பேண முன்வருமாறு இலங்கையின் சகல சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகளையும் நாம் அழைப்பதுடன், எமது பிரத்தியேகமான வங்கியியல் மாதிரியை அனுபவிக்குமாறு கோருகின்றோம். 

அதனூடாக எமது பணித் திட்டத்திற்கமைவாக“வளர்ச்சியை ஏற்படுத்துவது மற்றும் வாழ்வுக்கு வளமூட்டுவது” என்பதை எய்த எம்மால் உதவக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகளின் பரந்தளவு நிதித் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையிலமைந்த தீர்வுகள் மற்றும் சேவைகளை அமானா வங்கி வழங்குகின்றது. 

இதில் மூலதன செலவு நிதியளிப்பு, தொழிற்படு மூலதன நிதியளிப்பு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிதியளிப்பு, வியாபார சேவைகள், இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் லீசிங், நிரந்தர மேலதிகப் பற்று, காசோலை விலைக்கழிவு மற்றும் பணச் சேகரிப்பு தீர்வுகள் மற்றும் முதலீடுகள் போன்றன அடங்குகின்றன.

அமானா வங்கி பிஸ்னஸ் ப்ளஸ் இரண்டு அங்கத்துவ பிரிவுகளில் வழங்கப்படுகின்றன, அவற்றில் பிஸ்னஸ் ப்ளஸ் சில்வர் மற்றும் பிஸ்னஸ் ப்ளஸ் கோல்ட் ஆகியன அடங்கியுள்ளன. 

அமானா வங்கி பிஸ்னஸ் ப்ளஸ் அங்கத்துவம் பற்றிய மேலதிக தகவல்களை வங்கியின் இணையத்தளமான www.amanabank.lk  என்பதற்கு விஜயம் செய்து, வங்கியின் ஹொட்லைன் இலக்கமான 011 7 756 756 உடன் தொடர்பு கொண்டு அல்லது வங்கியின் எந்தவொரு 33 கிளைகளுக்கும் விஜயம் செய்து பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. 

ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 

2021 செப்டெம்பர் மாதத்தில் அமானா வங்கியின் நீண்ட கால தரப்படுத்தலை BB+(lka) உறுதியான தோற்றப்பாட்டுடன் வழங்கியிருந்தது. அமானா வங்கி வேறு எவ்வித துணை நிறுவனங்களையோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களையோ கொண்டிருக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் வங்கியின் கோடி அதிர்ஷ்டம் 2023...

2023-05-29 15:56:24
news-image

ஈவா அனுசரணையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய...

2023-05-25 10:11:01
news-image

DIMO Healthcare எனும் நாமத்தின் கீழ்...

2023-05-25 09:56:13
news-image

நவநாகரிக ஆடை வடிவமைப்பு பட்டப்படிப்பை வழங்க...

2023-05-25 10:09:50
news-image

'People’s Remittance கோடி அதிர்ஷ்டம்’ ஆண்டிறுதி...

2023-05-24 14:55:31
news-image

விளம்பரத்துறையை புதுப்பிக்க 3R உத்தியை இயக்க...

2023-05-22 20:19:51
news-image

DSI அதன் AVI வர்த்தகநாமத்தின் மீறலுக்கு...

2023-05-22 13:33:00
news-image

AIA லங்காவின் பிரதம முகவர் நிறுவன...

2023-05-22 12:39:22
news-image

அமானா வங்கி 'LankaPay டெக்னோவேஷன் விருதுகள்...

2023-05-18 17:08:15
news-image

பிசினஸ் டுடேயின் சிறந்த 40 நிறுவனங்கள்...

2023-05-18 14:31:58
news-image

மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையானது...

2023-05-16 20:57:13
news-image

கடன் தள்ளுபடி குறித்த செய்திக்கு மக்கள்...

2023-05-16 21:25:27