இலங்கை வனிதாபிமானாவின் இறுதிப் போட்டி நாளை 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்துடன் இணைத்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.
சிரச நிவ்ஸ் 1st உடன் இணைந்து NDB வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட வனிதாபிமான செயற்திட்டமானது, புதிய பாதையில் துரிதமாக முன்னேறி வரும் இலங்கை பெண் சாதனையாளர்களுக்கான களமாக மாறியுள்ளது.
இத் தளமானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிப்புச் செய்யும் பல்வேறு துறைகளில் உள்ள பெண் சாதனையாளர்களுக்கு அதிகாரம் மற்றும் அங்கீகாரம் வழங்கும் தேசிய மட்டத்திலான திட்டமாகும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, நவீன சந்தையில் பெண்களை பங்கு பெறச் செய்வதும், அதற்குள் அவர்கள் நுழைவதை ஊக்குவிப்பதும், அதற்கான வழிவகைகளை செய்வதுமாகும். இந்த நிகழ்வானது சமூகம் மற்றும் பொருளாதாரத்திற்கு தொடராக பங்களிக்கும் பெண்களை பாராட்டிப் போற்றுவதற்கான நடவடிக்கைளையும் மேற்கொள்கிறது.
வனிதாபிமான இறுதிப் போட்டியானது தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களை இரண்டு முக்கிய பிரிவுகளில் கௌரவிக்கும், அதாவது மாகாணத் துறை (இதில் சுயதொழிலாளர்கள் (சிறிய அளவிலான), சுயதொழிலாளர்கள் (மைக்ரோ அளவு), சுயதொழிலாளர்கள் (வளர்ந்துவரும்), இளம் தலைவர், சுற்றுச்சூழல் மேலாண்மை, விளையாட்டு, தன்னார்வ சேவைகள், புத்தாக்கம், இலக்கியம் மற்றும் கல்விச் சேவைகள்) மற்றும் பெருநிறுவனம் & தொழில்முறைத் துறை (இது மனித வளங்கள், நிதி மேலாண்மை, வியாபாரம் மற்றும் சந்தைப்படுத்தல், சட்டம், அரச துறை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, கலை, விளையாட்டு மற்றும் சுயதொழில் போன்ற துறைகளை உள்ளடக்கியது). மேலும், இலங்கையில் மிகவும் பிரபலமான பெண்ணிற்கான விருது (பொது மக்களிடமிருந்து SMS அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது) மற்றும் 5 சிறந்த மூத்த பெண் ஆளுமைகளுக்கு "வாழ்நாளில் ஒருமுறை" பாராட்டு விருது ஆகியவை இந்த நிகழ்வில் வழங்கப்படும்.
இலங்கை வனிதாபிமான நிகழ்ச்சி NDB இன் 'பெண்கள் மீதான வங்கி' என்ற கருப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்டது. இதில் பெண் சுயதொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் NDB அரலிய சேவைகளின் கீழ் கிடைக்கும் அரலிய வணிகக் கடன்கள் (மூலதனச் செலவுகள், பணி மூலதனம் மற்றும் நாளாந்த செலவுகள்) , அரலிய கடனட்டை, அரலிய நடப்புக் கணக்கு, அரலிய சேமிப்புக் கணக்கு, அரலிய பற்று அட்டை, பணி மூலதன ஏற்பாடுகள் (**வங்கியின் நடைமுறையில் உள்ள கடன் விதிமுறைகளுக்கு உட்பட்டது), முன்னுரிமை வட்டி விகிதங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் (ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவமனை காப்பீடு) அத்துடன் அரலிய குடைக்குள் நிதித்துறை அல்லாத பிற சேவைகள் உட்பட பல வங்கி சலுகைகளை அனுபவிக்க முடியும், இவை அனைத்தும் சுயதொழில் புரியும் பெண்களின் முயற்சிகளை வலுவூட்டும் நோக்கத்துடன் வழங்கப்படுகின்றன.
இப் பெண் சுயதொழிலாளர்கள், அரலிய அறிவுப் பரிமாற்ற மன்றங்கள், அரலிய வழிகாட்டல் மற்றும் வலையமைப்பு அமர்வுகள், மூன்றாம் தரப்பு ஆலோசனைச் சேவைகள் (உதாரணம். வணிகப் பதிவு செயல்முறை, வியாபாரக் கணக்கு முறை போன்றவை) மற்றும் சிறு வணிக முகாமைத்துவம் பற்றிய சிறப்புச் சான்றிதழ் திட்டத்ம் போன்றவற்றையும் பெறும் வாய்ப்புக்கள் அவர்களுக்கு உண்டு.
2019 ஆம் ஆண்டில் EDGE சான்றிதழைப் பெற்ற முதல் இலங்கை நிறுவனமாக NDB வங்கி திகழ்கிறது, இது பாலின சமத்துவத்திற்கான உலகளாவிய மதிப்பீட்டு முறை மற்றும் வணிக தரச் சான்றிதழ் வழங்குவதாகும், மேலும் வங்கியின் அரலிய சேமிப்புக் கணக்கு வழங்கும் சலுகைகள் பணிபுரியும் பெண்களுக்கு ஒரு பலமாக அமைந்தது.
அரலிய சேமிப்புக் கணக்கு வேலையில்லாமல் இருந்த பெண்களுக்கு கல்வி கற்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளித்து, பயமின்றி வாழ்க்கையில் புதிய பரிமானத்தை பெற வாய்ப்பளித்திருக்கிறது.
கொவிட்-19 ஆனது, நாடு நிதிசார் துறையில் மீள வேண்டுமானால், பொருளாதார ரீதியாக பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை மாத்திரமே நிரூபித்துள்ளது.
இலங்கைக்கான Asiamoney சிறந்த வங்கி விருதுகளில் NDB வங்கிக்கு “சிறந்த டிஜிட்டல் வங்கி 2021” விருது வழங்கப்பட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகையால் இலங்கையின் சிறந்த வங்கி 2021” என்ற மகுடம் சூட்டப்பட்டதுடன், மற்றும் இலங்கையின் வருடத்திற்கான வங்கி, என்ற விருதை ஐக்கிய இராச்சியத்தின் த பேன்கர் சஞ்சிகையிடமிருந்தும் பெற்றுக் கொண்டது.
NDB இலங்கையில் பட்டியலிடப்பட்ட 4வது பெரிய வங்கி மற்றும் NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும். இலங்கையில் உள்ள ஒரேயொரு நிதிச் சேவை நிறுவனமான NDB குழுமம் அதன் அனைத்து குழு நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும் சேவை சலுகைகளுக்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவையை வழங்குவதற்கும் இலங்கையின் நிதிச் சந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு உதவுவதிலும் தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM