அரசுக்குள் இருந்தவாறு எதிராகச் செயற்படுவது மிகப் பொருத்தமற்றது கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. பிரத்தியேக செவ்வி

07 Mar, 2022 | 05:59 PM
image

(நேர்காணல் - ஆர்.ராம்)

  • 'எரிபொருள் தட்டுப்பாடுரூபவ் மின்வெட்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலகுவான வழி விலைகளை அதிகரிப்பதே'
  • 'நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராகச் செயற்படுவதும், நிதி அமைச்சரை குற்றம் சாட்டுவதும் தவறு'
  • 'சுசில், விமல், கம்மன்பில பதவி நீக்கப்பட்டமை குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை'

அமைச்சரவையிலும், அரசாங்கத்திலும் அங்கம் வகித்துக்கொண்டு கூட்டுப்பொறுப்பினை மறந்து எதிராகச் செயற்படுவதானது பொருத்தமற்ற செயற்பாடாகும் என்பதோடு அடுத்துவரும் காலத்தில் ஏற்படப்போகும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும் தயார் என்று புதிதாக கைத்தொழில் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்றுள்ள எஸ்.பி.திஸாநாயக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்துள்ளார்.

 அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:-  மீண்டும் அமைச்சரவை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளீர்களே?

பதில்:-   ஆம், அமைச்சராக பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அதனையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். அமைச்சுப்பதவியைப் பொறுப்பேற்று செயற்படுவதற்கு நானும் பூரணமான தயார் நிலையில் உள்ளேன்.

கேள்வி:-  நீங்கள் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,அல்லது நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருடன் கூட்டாகவே தனியாகவோ பேச்சுக்களில் ஈடுபட்டீர்களா?

பதில்:-  அப்படியான எந்தப்பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. வியாழக்கிழமை காலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அன்றையதினம் மாலையில் என்னைச் சந்திப்பதற்கு அழைத்துள்ளதாக தகவல் அனுப்பப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் நான் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்றபோது கைத்தொழில்துறை அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்குமாறு கோரப்பட்டது. நான் அதனைப் பெற்றுக்கொண்டேன்.

கேள்வி:-  ஆனால் உங்களுக்கு கல்வி அமைச்சுப் பதவியே வழங்கப்படவிருந்ததாக கூறப்படுகின்றதே?

பதில்:-  உங்களைப் போலவே நானும் உத்தியோகப்பற்றற்ற முறையில் தான் அந்த தகவலைப் பெற்றிருந்தேன்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் பொறுப்பில் உள்ள கல்வி அமைச்சினை என்னிடத்தில் அளிப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் உயர்மட்டங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பிரகாரம் கைத்தொழில் அமைச்சினையே வழங்குவதென்றும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிகின்றேன்.

கேள்வி:-  கைத்தொழில் அமைச்சுப்பதவியை விடவும் கல்வி அமைச்சுப்பதவி கிடைத்திருக்கலாம் என்று நீங்கள் கருதவில்லையா?

பதில்:-  அப்படியில்லை. எனக்கு கைத்தொழில் அமைச்சோ, கல்வி அமைச்சோ அதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை சரியாகச் செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2022-03-06#page-14

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04