பசில் ராஜபக்ஷவுடையது என கூறப்பட்ட மல்வானை பகுதியிலுள்ள காணியை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யுமாறு பூகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை பூகொட நீதவான் ருவன் பத்திரன இன்று (14) பிறப்பித்துள்ளார்.

இதேவேளை குறித்த  ஏலத்தில் கிடைக்கப்பெறும் நிதியை அரச கணக்கில் வைப்பில் இடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த நீதிமன்ற விசாரணையின் போது பசில் ராஜபக்ஷ மல்வானை காணி தன்னுடையது அல்ல என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.