டொனால்ட் டிரம்ப் பாலியல் ரீதியில் முறையற்ற விதத்தில் தொட முயற்சித்தார் ; 5 பெண்கள் குற்றச்சாட்டு

14 Oct, 2016 | 10:38 AM
image

அமெரிக்க குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தமது சம்மதமின்றி தம்மை பாலியல் ரீதியில் முறையற்ற விதத்தில் தொட முயற்சித்ததாக  5  பெண்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை  குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மேற்படி பெண்களில் முன்னாள் பெண் வர்த்தகப் பிரமுகரான ஜெஸிக்கா லீட்ஸ் (தற்போது  74  வயது) மற்றும் ரேசல் குறூக்ஸ் ஆகிய இரு பெண்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமெரிக்க 'நியூயோர்க் டைம்ஸ்' ஊடகம் தகவல்களை வெளியிட்டுள்ளது. 

தான் 38 வயதில் விமானமொன்றில்  வைத்து டொனால்ட் டிரம்பால்  பாலி யல் ரீதியில் துன்புறுத்தலுக்குள்ளானதாக ஜெஸிக்கா தெரிவித்தார். விமானத்தின்  முதல் வகுப்பில் டொனால்ட் டிரம்பின்  ஆசனத்துக்கு அருகிலுள்ள ஆசனத்தில் தான் அமர்ந்து பயணித்த போது அந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

டொனால்ட் கடல்வாழ் உயிரினமான 'ஒக்டோபஸ்'  போன்ற ஒருவர் எனவும் அவருக்கு எல்லாவிடத்திலும் கரங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேசமயம் மின்டி மக்கில்லிவ்ரே (36  வயது)  என்ற மூன்றாவது பெண் பாம் பீச் போஸ்ட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில்,  13 வருடங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்பின்  மார்ஏலோகோ மாளிகையில்  இடம்பெற்ற நிகழ்வில் புகைப்படம் எடுக்கச்சென்ற புகைப்படக்கலைஞர் ஒருவருக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது   அங்கு டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியில் தவறான முறையில் பற்றிப் பிடித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

 நான்காவது பெண்ணான முன்னாள் அமெரிக்க அழகுராணிப் போட்டியாளர் கஸ்ஸண்ட்ரா சியர்லெஸ் தனது பேஸ் புக் இணையத்தளப் பக்கத்தில் முன்வைத்திருந்த குற்றச்சாட்டில், டொனால்ட்  டிரம்ப்  தன்னை அவ­ரது ஹோட்டல் அறைக்கு வரவழைத்து  பாலியல் உறவில் ஈடு­பட முயற்சித்ததாகக்  குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்பின் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை முன்வைத்த ஐந்தாவது பெண்  'பீப்பிள்ஸ்' சஞ்சிகையின் எழுத்தாளரான நடாஷா ஸ்ரோய்னோப் ஆவார்.  பேட்டியொன்றை எடுக்க டொனால்ட் டிரம்பை சந்திக்கச் சென்ற போது அவர் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயற்சித்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில் மேற்படி பெண்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு டொனால்ட் டிரம்ப் மறுப்புத் தெரிவித் துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17