சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் - சந்திமா விஜேகுணவர்த்தன

Published By: Digital Desk 3

07 Mar, 2022 | 09:56 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தடைகளை விதித்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் நாட்டுக்குள் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் இடம்பெறாமல் பாதுகாத்துக்கொண்டு செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

குறிப்பாக சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என சிறிலங்கா மனிதநேய கட்சியின் தலைவி கலாநிதி சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்துக்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு கலந்துரையாடி வருகின்றது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டுவருவால் ஐராேப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளை ஏற்படுத்திவருவதன் மூலம் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பைவிட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தடைகளை விதித்தால் பலமடங்கு பாதிப்பு ஏற்படும்.

அதனால் அரசாங்கம் நாட்டுக்குள் சிறியளவிலான தவறும் ஏற்படாமல் செயற்படவேண்டும். குறிப்பாக இனங்களுக்கிடையில்  நல்லிணக்கத்தை தொடர்ந்து பேணி வரவேண்டும். 

மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாத்துக்கொண்டு செயற்படுதல், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் இடம்பெறாமல் பாதுகாத்துக்கொண்டு செயற்படல் மற்றும் நாட்டின் ஜனநாயகத்தை முறையாக செயற்படுத்திவருவது  இந்த காலத்தில் மிகவும் முக்கியமாகும்.

ஏனெனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 196 அங்கத்துவ நாடுகள் இருக்கும் நிலையில் பேரவையின் இரண்டாவது தினத்திலேயே, மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதான் மூலம் வெளிப்படுத்தப்படுவது, இலங்கைக்கு எதிராக பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய பலம் தங்களிடம் இருப்பதையே காட்டுகின்றது. 

அந்த பலத்தை இல்லாமலாக்குவதற்கு இலங்கையில் வாழும் மக்கள் ஜனநாயக  உரிமைகளுடன் செயற்படுவதை  உறுதிப்படுத்தவேண்டும்.

பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் தங்கள் மத, கலாசார உரிமைகளுடன் வாழ்வதை உறுதிப்படுத்தவேண்டும். 

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டும். குறிப்பாக நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் பெற்று, சிறுபான்மை மக்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுதிப்படுத்துவது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும்.

அத்துடன் நாடுபொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தி பொருட்கள் இல்லாமையால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நாட்டில் அமுல்படுத்திவரும் மின் துண்டிப்பு பொருளாதாரத்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதேபோன்று மின் துண்டிப்பு காரணமாக அதி குளிரூட்களில் உணவுப்பொருட்களை பாதுகாத்துவைக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 7,8 மணி நேரம் ஜெனரேட்டர்களை பயன்படுத்துவது சாத்தியமில்லை. 

அதனால் செலவு அதிகரிக்கும். இந்த நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதற்கு யாராவது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், அது இலங்கையை வீழ்ச்சியடையச்செய்ய செய்யும் சதித்திட்டமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46