பேராபத்திலிருந்து தப்பியது அட்டன்

Published By: Raam

14 Oct, 2016 | 09:08 AM
image

(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் டன்பார் வீதியில் அமைந்துள்ள இரும்பு பொருட்கள் விற்பனை கடை ஒன்றில் நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் கடை முற்றாக சேதமடைந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் அட்டன் டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து 2 மணித்தியால முயற்சியின் பின்னே தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தீயினால் எவருக்கும் பாதிப்படாதா போதிலும் உடனடியாக செயற்ப்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததனால் ஏனைய கடைகளுக்கு தீ பரவாமல் ஏற்படவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இக்கடைக்கு அருகாமையில் உள்ள குதிரை பந்தைய கடையொன்றில் மலசல கூடத்திற்கு சென்ற ஒருவர் மலசல கூடத்தின் சூட்டினை உணர்ந்து சுற்றிப்பார்த்துள்ளார். அதனை தொடர்ந்து பக்கத்தில் உள்ள கடையிலிருந்து புகை வருவதனை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்ததனையடுத்து தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தீயிக்கான காரணம் மற்றும் சேதவிபரம் உறுதி செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56