குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பின் சந்தேகநபரான கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  

இந்த சம்பவம் கொகரெல்ல - ரணவிருகம பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக  பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அதே பகுதியைச் சேர்ந்த 49 வயதான நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகிலுள்ள பாழடைந்த குடியிருப்பொன்றிலேயே சந்தேகநபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.