இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் வரிசையில் சம்சுங் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனமும் ரஷ்யாவில் தங்கள் நிறுவன பொருட்கள் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது நடத்தப்படும் ரஷ்யாவின் தாக்குதல் 10 ஆவது நாளை எட்டியுள்ளது, உக்ரைனின் 2 ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் தொடர்ந்து ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து வருகிறது.

உலக நாடுகள் தனிமைப்படுத்தினாலும், ரஷ்யா கண்டுகொள்ளாமல் தனது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

Ukraine war: Battle for Kyiv begins as war enters 'hardest day' | Daily Mail  Online

இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், அமைப்புகள் என பல்வேறு தரப்பும் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், சம்சுங் நிறுவனம் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதன்படி, சம்சுங் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை ரஷ்யாவில் நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

Major Samsung shake-up: phone and consumer electronics divisions merged -  GSMArena.com news

இதனால், சம்சுங் நிறுவனத்தின் செல்போன், டிவி உள்பட அனைத்து தயாரிப்புகளின் விற்பனையும் ரஷ்யாவில் நிறுத்தப்பட்டுள்ளது.  மேலும், சம்சுங் நிறுவனத்தின் பிற சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ரஷ்யாவுக்கு எதிராக உலகின் பல்வேறு பெரு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளதால் அந்நாடு பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.