கிரவுன் நிறுவனத்தின் பணிப்பாளரும்அவுஸ்திரேலியாவின் முன்னணி வர்த்தகருமான ஜேம்ஸ் பெக்கர் கிரவுன் நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அவரின் இராஜினாமாவை அறிவித்ததை அடுத்து கிரவுன் நிறுவனத்தின் வீழ்ச்சி கண்டிருந்த பங்குகளின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியை  4 மாதங்களுக்கு முன்பே அவர் ஏற்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கெசினோ சூதாட்ட நிறுவனங்களை ஆசிய நாடுகளில் நிறுவியுள்ள கிரவுன் நிறுவனத்தின் வருமானம் கடந்த மாதங்களில் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் கெசினோ சூதாட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜேம்ஸ் பெக்கர் நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு அதற்கு பல்வேறு தரப்பிடமிருந்து எதிர்ப்புக்கள் வெளியாகினமையும் குறிப்பிடத்தக்கது.

கிரவுன் நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜேம்ஸ் பெக்கர் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

சுமார் 9 பில்லியன் சொத்துக்களைக் கொண்ட கிரவுன் நிறுவனத்தில் 53 சதவீத பங்குகள் ஜேம்ஸ் பெக்கருக்கு சொந்தமானதாகும்.

ஜேம்ஸ் பெக்கரின் இராஜினாமாவுக்கு காரணத்தை அவர் இது வரை அறிவிக்கவில்லை.