முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிட்ட ஐவர் கைது 

04 Mar, 2022 | 05:04 PM
image

(எம்.மனோசித்ரா)

முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொல்கஹாவெல பொலிஸ் பிரிவில் நீதிமன்றத்திற்கருகில் முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டு சென்று கொண்டிருந்த சந்தேகநபர் பொல்கஹாவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு , அவரிடமிருந்து 5 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய , கனேமுல்ல - இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர் கடவத்தை, கிரிபத்கொட, அலவ்வ, றாகமை, நிட்டம்புவ மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் 5 முச்சக்கரவண்டிகளையும் , 6 மோட்டார் சைக்கிள்களையும் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவற்றில் முச்சக்கரவண்டிகளின் 4 பாகங்களும் , 6 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 4 சந்தேகநபர்கள் நிட்டம்புவ மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 37 - 47 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

இவர்களில் பிரதான சந்தேகநபருக்கு எதிராக பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றத்தினால் 7 பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. 

ஏனைய 4 சந்தேகநபர்களும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

பொல்கஹாவெல பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

2026-03-16 13:38:22
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணத் தொகுதி ஒன்று...

2026-03-16 13:29:28
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு...

2026-03-16 12:28:59
news-image

சித்திரை புத்தாண்டு: சர்ச்சை முடிவுக்கு வந்தது;...

2026-03-16 12:59:01
news-image

நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்...

2026-03-16 12:53:47
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் :...

2026-03-16 12:34:37
news-image

போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்; பொதுமக்களுக்கு...

2026-03-16 12:32:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக”: ஜனாதிபதியின் அதிரடித்...

2026-03-16 11:13:17
news-image

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி குறித்து...

2026-03-16 12:14:29
news-image

எரிபொருள் வரிசைகளுக்கு மத்தியில் பாடசாலைகளை மூடவோ...

2026-03-16 10:47:31
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் அதிரடிச் சோதனை:...

2026-03-16 10:13:44
news-image

காட்டு மரையை வேட்டையாடிய இருவருக்கு விளக்கமறியல்

2026-03-16 11:12:07