சென்னையின் பிரபலமான வணிக நிறுவனமான 'சரவணா ஸ்டோர்ஸ்' உரிமையாளரும், விளம்பரப்பட நடிகருமான அருள் நடிப்பில் தயாராகும் திரைப்படத்திற்கு 'தி லெஜண்ட்' என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

'உல்லாசம்', 'விசில்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'தி லெஜண்ட்'. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அருள் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஊர்வசி ரவூத்லா நடித்திருக்கிறார்.
இவர்களுடன் பிரபு, தம்பிராமையா, யோகிபாபு, ஸ்ரீரஞ்சனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
![]()
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார்.
தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்திற்கு 'தி லெஜண்ட்' என பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

பெரு வணிகரான 'தி லெஜன்ட்' சரவணன் அருள் நடிகராக திரை உலகில் அறிமுகமாவதாலும், ஃபர்ஸ்ட் லுக்கில் ஆயுதங்களுக்கிடையே ஆக்ரோஷமான தோற்றத்துடன் அவர் காட்சி அளிப்பதாலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM