இந்தியாவில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட சீன நிறுவனங்கள்

04 Mar, 2022 | 03:14 PM
image

கொவிட் - 19 தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதார எழுச்சிக்கான நம்பகமான பங்காளியாக சீனா தன்னைப்  சித்தரிக்க முயற்சிக்கிறது. 

ஆனால் செயல்திறன் குறித்து  கேள்விகளை எழுப்பிய சீன தடுப்பூசிகளைப் போலவே பொருளாதார மீட்சியில் நாட்டின் கூட்டாண்மை , வீண் மோசடி மற்றும் அரசியல் கையாளுதலுடன் அமைகிறது. 

இந்நிலையில் ஊழல் மற்றும் குற்றச் செயல்களுக்கு எதிராக பெய்ஜிங் செயல்படத் தவறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஜிஎஸ்டி உளவுத்துறை அறிக்கையின்படி, பல சீன நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

பொருட்கள் அல்லது சேவைகளின் உண்மையான தரவுகள் இல்லாமல் சில நிறுவனங்களிடமிருந்து மோசடியான உள்ளீட்டு வரிக் கடன் பெற்றுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சில சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, சீன நாட்டவர்களை பணிப்பாளர்களாக கொண்ட பல்வேறு சீன நிறுவனங்களுக்கு உண்மையான  தரவுகள் மற்றும் சேவை வழங்காமல் போலியான விலைப்பட்டியல்களை வழங்கி வருகின்றன. 

இவ்வாறு நிதி முறைகேட்டில் ஈடுபட்ட பல சீன நிறுவனங்களின்  பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

2021 இல் தகவல் தொழில்நுட்பத் துறை சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சிலர் மீது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. 

இதனடிப்படையில் குறித்த இரு நிறுவனங்களுடனான பரிவர்த்தனைகளை வெளிப்படுத்துவதற்காக வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணையை இரு நிறுவனங்களும் கடைப்பிடிக்கவில்லை என்பதைக் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு 1,000 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், இரசாயனங்கள், இயந்திர பாகங்கள் மற்றும் ஊசி-வார்ப்பு இயந்திரங்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்கள் இந்திய வருமான வரித் துறையால் 2001 ஆண்டில் நவம்பர்  மாதம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

ஏனெனில் அவை வரி ஏய்ப்பில் ஈடுபட்டன. நாடு முழுவதும் உள்ள சுமார் 20 வளாகங்களை உள்ளடக்கிய தேடுதல் நடவடிக்கைகளில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் தொலைப்பேசி நிறுவனங்களின் நெட்வொர்க் மூலம் சீனாவுக்கு கிட்டத்தட்ட 20 கோடிகளை மாற்றியிருப்பது தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடத்தி கொலைசெய்யப்பட்டு முதலைக்கு இரையான வயோதிப...

2022-10-07 10:30:14
news-image

தாய்லாந்தில் முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில்...

2022-10-06 15:38:43
news-image

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : மேயர் உள்பட...

2022-10-06 14:01:44
news-image

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு ;...

2022-10-06 15:36:32
news-image

பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசியக்...

2022-10-06 13:27:45
news-image

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக...

2022-10-06 12:55:32
news-image

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இணைந்த...

2022-10-06 13:27:19
news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57
news-image

இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து...

2022-10-05 13:36:33
news-image

சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற...

2022-10-05 12:45:36