சிறிது நேரத்தில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு வருகை தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பஷல் ராஜபக்ஷவின் திறமையின்மை குறித்து உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் பகிரங்கமாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து இந்த சந்திப்பு உடனடியாக திட்டமிடப்பட்டுள்ளது.
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர், அரசியலமைப்பின் ஊடாக அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர்களது அமைச்சுப் பதவிகளில் இருந்து நேற்று நீக்கப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எரிசக்தி அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கைத்தொழில் அமைச்சராகவும் இதற்கு முன்னர் பதவி வகித்தார்.
இதற்கு முன்னர் மின்சக்தி அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் காமினி லொக்குகே புதிய எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதேவேளை புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி.திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
இந் நிலையிலேயே முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த சந்திப்பில் தற்போதைய அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவிகளையும் எதிர்காலத்தில் ஏற்கப்போவதில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வாசுதேவ நாணயக்கார, அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ள போவதில்லை என்று இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கமாக அறிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM