சனிக்கிழமை முதல் மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்ப்பு - இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு

Published By: Vishnu

03 Mar, 2022 | 05:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சீராக விநியோகித்தால் மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டிய தேவை கிடையாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாளை தினமும் நாடுதழுவிய ரீதியில் சுழற்சி முறையில் ஏழரை மணித்தியாலங்கள் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படும்.

அதற்கமைய நாளை காலை 08 மணிமுதல் மாலை 06 மணிவரையான காலப்பகுதியில் 5 மணித்தியாலமும்,மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களும் மின்விநியோகம் சுழற்சி முறையில் துண்டிக்கப்படும்.

இன்றைய தினம்  தரையிறக்கப்பட்ட 37,300 மெற்றிக்தொன் டீசலில் 8000 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலை மின்னுற்பத்தி நிலையங்களின் நடவடிக்கைக்கு விநியோகிக்க வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாளை மறுதினம் முதல் மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள்,உராய்வு எண்ணெயை தடையின்றி விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும்,

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான 3000 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே குறிப்பிட்டார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29