யுத்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்கள் பழிவாங்கலை நாடவில்லை - சம்பந்தன்

03 Mar, 2022 | 09:12 PM
image

(ஆர்.யசி)

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பழிவாங்கலை நாடவில்லை மாறாக பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மீள்நிகழாமை மற்றும் தொடரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை உறுதி செய்யுமாறே வேண்டுகின்றனர். 

அதேபோல் அவர்கள் உண்மை நிலைநாட்டப்படவேண்டும் என கோருகின்றனர். எனவே உண்மை உறுதி செய்யப்படாமல் நீதி நிலைநாட்டப்பட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் தண்டனையின்மை கலாச்சாரமானது சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டிய தருணத்தை எட்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் இவற்றை சுட்டிக்காட்டியுள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதானது,

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வறிக்கைக்கான இலங்கை அரசின் பதில் அறிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பாக இறுதி யுத்த கட்டத்தில் நம்பத்தகுந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றதாகவும் அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை உறுதி செய்யப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையாளரின் உள்ளக விசாரணையும் இதனையொத்த ஒரு முடிவிற்கு வந்துள்ளது. 

இலங்கையின் தற்போதுள்ள அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களும் இதுவரை எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்கவில்லை. 

தற்போதைய அரசாங்கமானது முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையில் கலப்பு பொறிமுறை அடங்கிய இணை அனுசரணை பிரேரணையிலிருந்து விலகிக்கொண்டது.

இலங்கை அரசாங்கமானது சுதந்திரம் அடைந்ததது முதல் நீண்டகாலமாக ஆழமான தண்டனையின்மை கலாச்சாரத்தில் ஊறியுள்ளது. 

இது தமது அரசியல் பலத்தை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காக சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக உள்ளக வாக்குறுதிகளை மதிக்காமலும் அதன் விளைவாக கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதிலும் சரியான முடிவுகளை எடுப்பதிலும் அல்லது வேறெந்த ஒரு விடயத்திலும் தீர்மானம் எடுக்கும் நிலைகளில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

எல்லா அரசாங்கங்களும் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்காக பேரினவாதத்தினை ஆதரிக்கும் கொள்கைகளை முன்னிறுத்தி வந்துள்ளனர் இது இலங்கை நாட்டிற்க்கு பாரிய பாதகங்களை கொண்டுவந்துள்ளதுடன் ஒருமித்த இலங்கை நாட்டின் மக்களையும் இது பாதித்துள்ளது. 

உண்மை நிலைமையினை சிங்கள பௌத்த மக்களிற்கு எடுத்து கூறினால் அவர்கள் நிலைமையை புரிந்து கொள்வார்கள் ஆனால் ஒரு சில சிங்கள தலைவர்களை விட ஏனையவர்களிற்கு இதனை செய்வதற்கு தைரியம் இல்லை. 

இலங்கை முகங்கொடுத்துள்ள வரலாறு காணாத பிரச்சினைக்கும் மீண்டெழுந்து வரமுடியாத நிலைமைக்கும் இதுவே பிரதான காரணமாகும்.

இதேவேளை ஆயுதமேந்தாத பாதிப்பிற்குள்ளான தமிழ் மக்களின் நிலைமையை குறிப்பிடுவது முக்கியமானதாகும். 

இவர்கள் யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளானவர்கள் ஏனையோர் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டவர்கள் ஏனையவர்கள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்கள். 

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டு பாதிப்படைந்த இந்த மக்கள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுகிறார்கள்.

இவர்கள் பழிவாங்கலை நாடவில்லை மாறாக பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மீள்நிகழாமை மற்றும் தொடரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை உறுதி செய்யுமாறே வேண்டுகின்றனர். 

அவர்கள் உண்மை நிலைநாட்டப்படவேண்டும் என கோருகின்றனர். உண்மை உறுதி செய்யப்படாமல் நீதி நிலைநாட்டப்பட முடியாது. இலங்கை ஐக்கிய நாடுகளின் சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்று கொண்டுள்ளது. அத்தகைய உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பொறுப்பாகும்.

இதனை செய்ய தவறுவதானது தற்போது நிலவும் தண்டனையின்மையை உறுதி செய்வதாகவே அமையும். தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடும்  ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணை மற்றும் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் போன்றன இலங்கையில் எது நடந்தாலும் அது ஒரு உள்ளக நிகழ்வாகவும் இறையாண்மை தொடர்பான விடயமாகவும் அதில் வெளி தலையீடுகள் இருக்க முடியாது எனவும் எண்ணுவதற்கு தூண்டுகிறது.

சொந்த மக்களது இறையாண்மை மதிக்கப்பட்டு அவர்கள் சுய மரியாதை மற்றும் கௌரவம் சமத்துவம் மற்றும் நீதி மேலும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களில் இருந்து பாதுகாக்கபடுகின்ற போதுதான் ஒரு நாட்டின் இறையாண்மை புனிதத்துவம் பெறுகின்றது என்பதனை குறிப்பிடவேண்டும். 

தமிழ் மக்கள் தமது பூர்வீகமான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஒன்றிணைந்த பிரிவுபடாத இலங்கையில் அர்த்தமுள்ள அதிகார பிரயோகத்துடன் தொடர்ந்தும் வாழ விரும்புகிறார்கள். இது உறுதி செய்யப்படவேண்டியது அடிப்படையாகும்.

தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் இந்த நிலைமைக்கு தமீழீழ விடுதலை புலிகளே காரணம் என கூறுகின்றனர். 

ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் தமிழ் மக்களிற்கெதிரான கலவரங்கல் இடம்பெறாமல் இருந்திருந்தால் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு படையினர் பாதுகாத்திருந்தால்  இலங்கை பிரதமர்களிற்கிடையிலும் தமிழ் தலைவர்களிற்கிடையிலும் ஏற்ப்படுத்தபட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால்  தமிழ் மக்களின் சார்பில் தமீழீழ விடுதலை புலிகள் தோன்றியிருக்கமாட்டார்கள் என்பதனை குறிப்பிட வேண்டும். 

ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இது தொடர்பில் ஒரு பொறுப்பு உள்ளது. சமாதானமும் மீளநிகழாமையும் இந்த விடயங்கள் யதார்த்தமாக தீர்க்கப்படவேண்டும் என வலியுறுத்துகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54