300 ஆவது டெஸ்ட் போட்டியில் வரலாற்றை மாற்ற தயாராகும் இலங்கை

Published By: Vishnu

03 Mar, 2022 | 05:18 PM
image

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளைய தினம் மொஹாலியில் ஆரம்பமாகிறது.

இந்தியாவுக்கு எதிரான டி:20 தொடரில் இலங்கை அணி முழுமையான தொடர் தோல்வியுடன் நாளை களமிறங்கவுள்ளது. எனினும் டி:20 அணியில் இடம் பெறாத பல வீரர்கள் இருப்பதால் மன உறுதியுடன் நாளை களம் காணும் இலங்கை.

இந்திய-இலங்கை டெஸ்ட் வரலாறு 1982 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் முதல் டெஸ்ட் வெற்றியைக் குறிக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் வரலாறு இலங்கைக்கு தனித்துவமானது. 

1985 ஆம் ஆண்டு இந்திய அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின்போதும் அதன் பின்னரும் இலங்கை பல தடவைகள் இந்தியாவை தோற்கடித்துள்ளது

எனினும் 1982 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் பின்னர் 39 வருடங்களில் இலங்கை அணி இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதில்லை. 

அதுமட்டுமின்றி உள்ளுரில் அல்லது கடந்த ஏழு வருடங்களில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி எந்த வெற்றியையும் பெறவில்லை.

இந்தியாவைப் போலவே இலங்கை டெஸ்ட் வரலாற்றிலும் 40 ஆண்டுகால சிறப்பு கொண்டாட்டமாக நாளைய போட்டி அமைந்துள்ளது. இது இலங்கைக்கு 300 ஆவது டெஸ்ட் போட்டி ஆகும். 

அதேநேரம் இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோஹ்லிக்கு இது 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். 

1982 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் இலங்கை அணி 299 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 95 இல் வெற்றி பெற்று, 113 இல் தோல்வியடைந்துள்ளது. 91 ஆட்டங்கள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

300 ஆவது டெஸ்ட் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, 

போட்டிகளை வெல்வதே எங்களது முக்கிய நம்பிக்கை. இந்தியாவுடன் விளையாடி வெற்றி பெறுவது ஒரு விளையாட்டு அல்ல. ஆனால் அதை இலக்காக கொண்டு பல பயிற்சிகளை செய்துள்ளோம். ஒரு திட்டம் உள்ளது, நாளைய போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாளைய டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை அடையும் முனைப்பில் உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41