(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும் நீதிமன்றங்களில் வழக்குத் தொடராமல் சிறைவாசம் அனுபவிப்போரை விடுவிக்கக் கோரியும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு முன்னால் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் சிறைவாசம் அனுபவித்துவருபவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்களது பிள்ளைகள் சகிதம் இந்த அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமின்றி சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க்கோரிய மனுவொன்று ஐ.நா.வின் இலங்கை காரியாலயத்தின் உள்ளூர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவரிடம் மனுவொன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி சேனக்க பெரேரா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
"பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி நாம் இன்று (நேற்று) இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திலுள்ள பாரதூரமான விடங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவும்.
இந்த சட்டத்தை இலங்கையிலிருந்து நீக்குவதற்கு ஜெனீவா கூட்டத் தொடரின்போது கலந்துரையாடப்பட வேண்டுமென்பதற்கான பின்புலமாக எமது இந்த போராட்ட அமையும் என நம்புகிறோம்.
இந்த பயங்கரவாத தடைச் சட்டமானது, நாட்டில் காணப்படும் எந்தவொரு சட்டத்திற்குமே சம்பந்தமில்லாத ஆபத்தான சட்டமாகவே இருக்கின்றது. 43 ஆண்டுகளாக இந்த சட்டத்தின் ஊடாக சிவில் செயற்பாட்டளர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், கீர்த்தி ரத்நாயக்க உள்ளிட்ட பலரை கைது செய்து சிறைச்சாலைகளிலும், தடுப்புக் காவல்களிலும் வைக்கப்பட்டனர். இதன் மூலமாக இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின்படி நீதிமன்றங்களுக்கு செல்வதற்கு முடியாது என்றே கூறப்படுகிறது. தற்போதும்கூட 13,14,15 ஆண்டுகளாக தடுப்பு காவல்களில் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாவிடின் 13,14,15 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருபவர்களின் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு கூறுவார்கள்? இந்த சட்டம் குறித்து திருத்தங்களை மேற்கொள்வோம் என அரசாங்கம் சர்வதேசத்திற்கு கூறியிருந்தது.
எனினும்,ஜெனீவா கூட்டத் தொடருக்கு முன்னர் புதிய திரைப்படங்கள் எடுப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆயினும், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த சட்டம் தொடர்பில் திருத்தங்களை மேற்கொண்டிருந்த போதிலும், அதில் எந்தவிதமான நலனும் இல்லை. நபர்களை கைது செய்து தடுத்து வைத்து விசாரிக்கும் நடவடிக்கை இன்னமும் அப்படியே இருக்கிறது" என்றார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியல்வாதிகள் தமக்கு எதிரானவர்களை பழிவாங்குவதற்கு சிறந்த விடயமாக இந்த பயங்கரவாத தடைச் சட்டம் காணப்படுகிறது. பிணை தொடர்பில் தெளிவான விடயங்கள் எதுவும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டில்லை.
குற்றவாளி என உறுதிப்படுத்தப்படும் வரையில் அவர் குற்றமற்றவராவர் என அரசியலமைப்பில் கூறப்படுகிறது. அப்படியாயின், அரசியலமைப்பின்படி எவ்வாறு ஒருவரை தடுத்து வைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM