மியன்மாரிலிருந்து அதிக தொகையைச் செலுத்தி அரிசியை இறக்குமதி செய்யும் இலங்கை

Published By: Digital Desk 4

03 Mar, 2022 | 05:13 PM
image

மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்காக ஏனைய நாடுகளை விடவும் இலங்கை அதிக தொகையைச் செலுத்துவதாக அந்நாட்டுப் பத்திரிகையான 'குளோபல் நியூ நைட் ஒஃப் மியன்மார்' செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் பாரிய அரிசிக்கு தட்டுப்பாடு ; உற்பத்தி நிறுத்தப்படும் - அரிசி  உற்பத்தியாளர்கள் சங்கம் | Virakesari.lk

மியன்மாரிலிருந்து ஏனைய நாடுகளுக்கு ஒரு தொன் அரிசி 340 - 350 அமெரிக்க டொலருக்கு இடைப்பட்ட விலையில் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் இருப்பினும் இலங்கைக்கு ஒரு தொன் அரிசியை ஏற்றுமதி செய்யும்போது அதற்கான 440 - 450 அமெரிக்க டொலருக்கு இடைப்பட்ட விலை அறவிடப்படுவதாகவும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'இலங்கைக்கு கடந்த வருடம் மியன்மாரில் உற்பத்திசெய்யப்படும் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. எமது அயல்நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

மியன்மாரிலிருந்து இலங்கைக்குக் கடல் மார்க்கம் ஊடகவும் அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது' என்று மியன்மாரின் பேயின்ற்நோக் அரிசி மொத்த விற்பனைத் திணைக்களத்தின் செயலாளர் யூ தான் ஓ தெரிவித்ததாக அப்பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும்போது மட்டுப்பாடுகள் குறைவாகக் காணப்படுகின்றன.

அரிசியின் தரத்தை இலங்கை வரையறுக்கவில்லை. மாறாக ஐரோப்பிய நாடுகளுக்கும் சீனாவிற்கும் அரிசியை ஏற்றுமதி செய்யும்போது, அவை அரிசியின் தரம் தொடர்பான சான்றிதழைக் கோருவதால் அந்நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான செயன்முறை சற்றுக் கடினமானதாகும்.

அதன்படி மியன்மாரின் வர்த்தகர்களும் ஏற்றுமதியாளர்களும் இலங்கைக்கு அரிசியை ஏற்றுமதி செய்திருக்கின்றார்கள்' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2022 மற்றும் 2023 ஆகிய இரு ஆண்டுகளில் மியன்மார் இலங்கைக்கு 100,000 தொன் வெள்ளை அரிசியையும் 50,000 தொன் புழுங்கல் அரிசியையும் ஏற்றுமதிசெய்வது குறித்த இருதரப்பு ஒப்பந்தம் மியனமாருக்கும் இலங்கைக்கும் இடையில் கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58