நாட்டில் நீதியைக்கோருபவர்களே பயங்கரவாதிகளாக நோக்கப்படுகின்றனர் - ஐ.நா. வின் கிளைக்கூட்டத்தொடரில் ஹரீன்

03 Mar, 2022 | 05:16 PM
image

(தனுஜா)

இன்றளவில் இலங்கையைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டை வெடிக்கச்செய்து பெருமளவான உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களின் செயற்பாடு தீவிரவாதமாக நோக்கப்படவில்லை.

மாறாக அத்தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதும் அதில் உயிரிழந்த தமது அன்பிற்குரியவர்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறு கோருவதும் அத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதுமே தீவிரவாதமாக நோக்கப்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கிளைக்கூட்டத்தொடரில் ஆற்றிய உரையின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம், அந்த நோக்கம் ஈடேறுவதற்குப் பங்களிப்புச்செய்யவில்லை. மாறாக அது பயங்கரவாதம் தீவிரமடைவதற்கே வழிவகுத்திருக்கின்றது என்பதை வரலாற்று நிகழ்வுகளின் ஊடாகப் புரிந்துகொள்ளமுடிவதாகவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார். 

அத்தோடு தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு, இன மற்றும் மதரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலான அரசியல் கலாசாரம் ஆகியவற்றை முடிவிற்குக்கொண்டுவருவதற்கு பங்களிப்பை வழங்குமாறு அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்கு அவசியமான அழுத்தங்களை அரசாங்கத்தின்மீது பிரயோகிக்குமாறு சர்வதேசத்திடம் வலியுறுத்தும் நோக்கில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கடந்த திங்கட்கிழமை அதிகாலை ஜெனிவாவிற்குப் பயணமானார்கள். 

ஜெனிவா சென்றடைந்ததன் பின்னர் அங்கு தாம் முன்னெடுக்கவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஃபேஸ்புக் நேரலையூடாக அவர்கள் தெளிவுபடுத்தலொன்றை வழங்கியிருந்தனர்.

'நாம் ஜெனிவாவை வந்தடைந்துள்ள நிலையில், எமது சகோதரர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை முன்னிறுத்திய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். அதன்படி முதற்கட்டமாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி குறித்து சர்வதே நீதிமன்றத்திற்கும் அனைத்து நாடுகளினதும் பாராளுமன்ற ஒன்றியத்திற்கும் தெளிவுபடுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடருடன் இணைந்ததாக நடைபெறவிருக்கும் ஏனைய கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் பங்கேற்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். எதுஎவ்வாறெனினும் எமது நாடு கைச்சாத்திட்டிருக்கின்றதும் இணங்கியிருக்கின்றதுமான சர்வதேசக்கடப்பாடுகள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விடுதலைப் பெற்றுக்கொடுப்பதிலேயே விசேடமாக அவதானம் செலுத்தியிருக்கின்றோம். அதுகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புபட்ட ஏனைய கட்டமைப்புக்களின் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தவுள்ளோம்' என்று அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக நடைபெற்ற கிளை கலந்துரையாடலில் பங்கேற்றுக்கொண்டு உரையாற்றிய எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ மேலும் கூறியதாவது:

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எமது சகோதர பாராளுமன்ற உறுப்பினரின் விடுதலையை வலியுறுத்தும் நோக்கிலேயே நாம் இங்கு வருகைதந்திருக்கின்றோம். இலங்கையின் சட்டத்தில் 'நீதமன்ற அவமதிப்பு' குறித்து உரியவாறு வரையறுக்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். 

அதேபோன்று உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் ஈடுபட்ட முன்னிலை அதிகாரியொருவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், நிலைமாறுகாலநீதி நிலைவரம், அனைவராலும் பரவலாகப் பேசப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டம் ஆகியன தொடர்பிலும் தெளிவுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

ஒரேயொரு நாளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டமானது, ஆரம்பத்தில் பயங்கரவாதத்தை இல்லதொழிப்பதற்கான ஓர் தற்காலிக சட்டமாகவே கொண்டுவரப்பட்டது. 

சந்தேகநபர்களைத் தன்னிச்சையாகக் கைதுசெய்வதும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் 18 மாதங்கள் வரையில் தடுத்துவைப்பதுடம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குப் உதவும் என்று அச்சட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பங்களிப்புச்செய்தவர்கள் நம்பியபோதிலும், அது சாத்தியமாகவில்லை. 

மாறாக நாட்டில் பயங்கரவாதம் தீவிரமடைவதற்கும் மேலும் பல பிரச்சினைகள் தோற்றம்பெறுவதற்கும் இச்சட்டம் வழிவகுத்துள்ளமையினை வரலாற்று நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இச்சட்டம் சிறுபான்மையினத்தவரின் உரிமைகளும் எமது நாட்டில் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டுவந்த சட்டத்தின் ஆட்சியும் மீறப்படுவதற்கு வழிவகுத்தது. 

பயங்கரவாதத்தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 வருடங்கள் கடந்ததன் பின்னர் நீண்டகால சிவில் யுத்தத்திற்குள் நுழைந்தது. பயங்கரவாதத்தடைச்சட்டம் அதனை முடிவிற்குக்கொண்டுவரவில்லை. மாறாக அதனை மேலும் தீவிரப்படுத்தியது.

எவ்வித வேறுபாடுகளுமின்றி அனைத்துத்துறைசார் தரப்பினரும் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான அச்சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டார்கள். உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் வெளிக்காட்டிவரும் அசிர்ததை தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் முக்கிய கேள்விகளை எழுப்பியமைக்காக நான் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுவேன் என்ற அச்சுறுத்தலுக்குள்ளானேன். 

இன்றளவில் இலங்கையைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டை வெடிக்கச்செய்து பெருமளவான உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்கள் தீவிரவாதிகளாக நோக்கப்படவில்லை. மாறாக அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுமாறு வலியுறுத்துபவர்களும் அத்தாக்குதல் சூத்திரதாரிகள் பற்றிய விசாரணைகளை முன்னெடுப்பவர்களுமே தீவிரவாதிகளாக நோக்கப்படும் நிலையுருவாகியுள்ளது. 

அரசியல் ரீதியான தலையீடுகளின்றி பொலிஸார் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு இடமளிப்பது உள்ளடங்கலாக கட்டமைப்பு ரீதியில் உரியவாறான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதன் ஊடாக தீவிரவாதத்தை முறியடிக்கமுடியும்.

அண்மையில் இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளை முன்வைத்திருக்கின்றது. இருப்பினும் அந்தத் திருத்த முன்மொழிவுகள் 'பயங்கரவாதம்' என்பதற்குரிய வரைவிலக்கணத்தை வழங்குதல், சந்தேகநபர்களைத் தன்னிச்சையாகத் தடுத்துவைப்பதற்கு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் குறைத்தல் உள்ளடங்கலாக மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடியவாறான சரத்துக்களைத் திருத்தியமைப்பதற்குத் தவறியிருக்கின்றன. 

தமது மக்கள் தொடர்பில் நிறைவேற்றப்படவேண்டிய பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியிருக்கும் நிலையில், அதனை மழுங்கடிப்பதற்கானதோர் முயற்சியாகவே இந்தத் திருத்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இன்றளவிலே இலங்கை ஜனநாயக ரீதியில் மாத்திரமன்றி பொருளாதார ரீதியிலும் சீர்குலைந்திருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு, இன மற்றும் மதரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலான அரசியல் கலாசாரம், ரஞ்சன் ராமநாயக்க போன்று நியாயமான விடயங்களைப் பேசுபவர்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகித்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளும் பயணத்தைத் தடுத்துநிறுத்தவேண்டும். அதற்கு உங்களுடைய பங்களிப்பு அவசியம் என்பதை இங்கு வலியுறுத்தவிரும்கின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49