அடுத்த தேர்தலுக்கு கூட்டணி தேடும் பங்காளிகள் - கடுமையாக அமைச்சர் ரோஹித

Published By: Vishnu

03 Mar, 2022 | 02:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எதிர்வரும் தேர்தலில் எப்பக்கம் செல்லலாம் என்ற முயற்சியில் பங்காளி கட்சியினர் தற்போது ஈடுப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்த துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, அரசாங்கத்தில் இருக்க விருப்பமில்லையாயின் பங்காளி கட்சிகள் தாராளமாக அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என்றும்  குறிப்பிட்டார்.

May be an image of 1 person and standing

துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று முழு நாட்டையும் சரியான பாதையில் என்ற கொள்கை திட்டத்தை வெளியிட்டனர். பங்காளி கட்சிகளில் உள்ளடங்கும் தரப்பினரை முழு நாட்டு மக்களம் நன்கு அறிவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரரும் நல்லாட்சி அரசாங்கத்தையும், அதற்கு முற்பட்ட அரசாங்கத்தையும் பலவீனப்படுத்தினார்கள். சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டையும் ,அரசியல் துரோகத்தையும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கத்திலிருந்து முழுமையான வரப்பிரசாதங்களையும் எவ்வித குறையுமின்றி பெற்றுக்கொண்டு தற்போது நிதியமைச்சருக்கும், அரசாங்கத்திற்கும் எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரை நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் விமல்வீரவன்ச தற்போது அவர் தலைமையில் முழு நாட்டையும் சரியான பாதையில் கொண்டு செல்ல முயற்சிப்பது நகைப்புக்குரியது என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடியில் சந்தேகத்தில் கைதான 30 பேரும்...

2024-03-02 01:12:34
news-image

மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது...

2024-03-02 00:04:10
news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58