நாடளாவிய ரீதியில் நாட்டிலுப்பை மர நடுகைத் திட்டத்தைக முன்னெடுக்க SLT-Mobitel நடவடிக்கை

03 Mar, 2022 | 05:22 PM
image

தேசிய தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் SLT-Mobitel, எதிர்காலத் தலைமுறைக்காக நிலைபேறான மற்றும் பசுமையான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தேசிய நாட்டிலுப்பை மர நடுகைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைத்துக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதனூடாக புவியின் இயற்கை சமநிலையைப் பேணுவதில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்க SLT-Mobitel முன்வந்துள்ளது. 

அதனூடாக இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த சுகாதாரம் மற்றும் நலனை மேம்படுத்துவது பிரதான குறிக்கோளாக அமைந்துள்ளது.

இந்த முயற்சியின் முதல் அங்கமாக, வனாந்தரச் செய்கை, காபன் வெளியீட்டை குறைத்தல் மற்றும் பச்சை இல்ல வாயுக்களின் செறிவைக் குறைத்தல் மற்றும் உயிரியல் பரம்பலை மேம்படுத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது சூழல் பாதுகாப்பு சமூக பரிபாலன நிகழ்ச்சியின் (ESG) கீழ், மொனராகலை பிரதேசத்தில் நாட்டிலுப்பை மர நடுகைத் திட்டத்தை ஆரம்பித்தது. 

மரங்களை நடுவதன் முக்கியத்துவம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தினூடாக இந்த நாட்டின் தொழிற்துறைக்கும், மக்களுக்கு மாத்திரமன்றி ஒட்டு மொத்தமாக இந்நாட்டின் தாவர மரங்களை பேணுவதற்கும் பெருமளவு பங்களிப்பை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதில் SLT- Mobitel நம்பிக்கை கொண்டுள்ளது.

நிலைபேறான விவசாயத்துறைக்கு இன்றியமையாத நாட்டிலுப்பை சேதன பயிர்ச் செய்கை தொடர்பில் பெருமளவில் பேசப்படும் இந்த காலகட்டத்தில், நாட்டிலுப்பை மரத்தின் முக்கியத்துவம் முன்னரை விட அதிகரித்துள்ளது. 

இந்நாட்டில் பழங்காலத்தில் வயல்களை அண்மித்து இந்த மரத்தை அதிகளவு பயிரிட்டதன் மூலமாக, அவற்றிலிருந்து வயல்களில் பயிரிடப்படும் பயிர்களுக்கு பெருமளவு போஷணையூட்டுவதற்கும், கிருமிநாசினியாகவும் பங்களிப்புக் கிடைத்திருந்தது.

நாட்டிலுப்பை பூ மற்றும் காய்களை உண்டு அவற்றை கடத்தும் வௌவால்களின் மூலமாக, பயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமான நைதரசன் மற்றும் இதர போஷணைகள் பல கிடைப்பதாக நம்பப்படுகின்றது.

திட்டத்தின் பரந்தளவு ஏற்பாடு நாட்டிலுப்பை மரங்களை பெரும்பாலும் உலர் மற்றும் இடைப்பட்ட காலநிலை வலயத்திலும் அதிகம் காண முடிகின்றமையால், இந்தத் திட்டத்தை அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, மொனராகலை, கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, இரத்தினபுரி போன்ற பிரதேசங்களை உள்வாங்கி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் முன்னேற்றத்தை அவதானிப்பதற்கு புதிய வழிமுறை பயிரிடப்படும் தாவரங்களின் வளர்ச்சியையும் நீடித்த நிலைத்திருப்பையும் உடனுக்குடன் (Real-time) முறையில் அவதானிப்பதற்கு “துரு” எனும் நாமத்தில் தொலைபேசி App ஒன்றை SLT-Mobitel அறிமுகம் செய்துள்ளது. 

வலய அடிப்படையில் பயிரிடப்பட்டுள்ள தாவரங்களின் எண்ணிக்கை இந்த App இனூடாக காண்பிக்கப்படுகின்றது. 

மேலும், 3 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கு ஒரு தடவை, அந்த பயிரிடுவோருடன் தொடர்பை ஏற்படுத்தி அந்தக் காலப்பகுதியில் பயிர்களின் வளர்ச்சியையும் நிலைபேறாண்மையையும் காண்பிப்பதற்கு புகைப்படங்களை உள்வாங்குவதற்கும் வலுச்சேர்க்கப்பட்டுள்ளது.

காலத்தின் தேவைக்கேற்ப தேசிய செயற்திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் முதல் அங்கம் மொனராகலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டம் 2022 பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்றது. 

அதன் பிரகாரம், இதுவரையில் 700 நாட்டிலுப்பை தாவரக் கன்றுகள் பயிரிடப்பட்டுள்ளன. அடுத்த கட்டத் திட்டம் அநுராதபுரத்தில் முன்னெடுக்கப்படும்.

SLT-Mobitel சமூக வலைத்தளங்களினூடாக எந்தவொரு நபருக்கும் இந்தத் தேசியத் திட்டத்துடன் இணைந்து கொள்ள முடியும்.

எதிர்காலத் தலைமுறையினரி்ன் நலன் கருதி நாம் இன்றைய கடமையை நிறைவேற்றுவோம்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right