மின்வெட்டு காலத்தை குறைக்க எதிர்பார்ப்பு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Published By: Vishnu

03 Mar, 2022 | 01:21 PM
image

அடுத்த வாரத்தில் இருந்து மின்வெட்டு காலத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விசாரணைகள் மற்றும் பொது விசாரணைகள் தொடர்பான சாட்சியங்கள் கோரும் நிகழ்வு  கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதன்போதே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்  ஜனக ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறியதுடன், நாட்டில் போதிய மழை வீழ்ச்சி பதிவாகும் வரை இந்த நிலைமை தொடரும் என்றும் கூறினார்.

எரிபொருள் கையிருப்பு இல்லாத காரணத்தினால் இன்றும் நாளையும் ஏழரை மணிநேரம் மேல் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கியமை கவலையளிக்கின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிக எண்ணிக்கையிலான மின் உற்பத்தி நிலையங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக. அடுத்த சில நாட்களில் எரிபொருள் கையிருப்பு கிடைத்தால், மின் நெருக்கடிக்கு தற்காலிகமாக தீர்வு காண முடியும்.

ஜனாதிபதியுடனான நேற்றைய கலந்துரையாடலில் தேவையான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொள்வதற்கும், செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கும் டொலர்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களுடன் இரு...

2026-09-16 14:56:41
news-image

நாமல் ராஜபக்‌ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

2026-09-16 14:56:09
news-image

யாழ். களப்பில் 9,000 கடல் அட்டைகளுடன்...

2026-09-16 14:55:03
news-image

புதுக்குடியிருப்பில் மணற்கொள்ளை உட்பட சட்டவிரோத செயற்பாடுகள்...

2026-09-16 14:52:16
news-image

கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாமல்...

2026-09-16 14:14:14
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு...

2026-09-16 13:51:46
news-image

மட்டக்களப்பில் சிவஞானம், சுமந்திரன் உட்பட 4...

2026-09-16 12:46:18
news-image

அழைப்பாணையை அறிந்திருந்தும் ஷிரந்தி ராஜபக்‌ஷ நாட்டை...

2026-09-16 12:49:25
news-image

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்காத...

2026-09-16 13:12:57
news-image

மாத இறுதிக்குள் வருமான வரியைச் செலுத்துங்கள்...

2026-09-16 12:44:59
news-image

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முழுவதையும் வற்றச்...

2026-09-16 12:12:13
news-image

ஞானசார தேரர் மீதான வழக்கு செப்டெம்பர்...

2026-09-16 12:21:37