எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, மின்சாரம் துண்டிப்பு மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அட்டன், கினிகத்தேனை நகரில் இன்று (03.03.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜே.வி.பியினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அக்கட்சியின் அமைப்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.
எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியதுடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
" ஏழரை மணிநேர மின்சாரம் துண்டிப்பால் சிறு முயற்சியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன. இதற்கிடையில் எரிபொருளும் இல்லை. அதனால் சாரதிகள் உட்பட பல துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாட்டில் பல பிரச்சினைகள் உள்ள நிலையில், இப்படியான பிரச்சினைகளால் மக்கள் மீண்டெழ முடியாதுள்ளது." - எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM