2022 பீஜிங் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்ய மற்றும் பெலருஸ் விளையாட்டு வீரர்கள் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச பாராலிம்பிக் குழு (IPC) அறிவித்துள்ளது.

Beijing 2022 Winter

எனினும் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக வீரர்கள் நடுநிலை கொடியின் கீழ் மாத்திரம் போட்டிகளில் பங்கெடுக்க முடியும்.

அவர்கள் பாராலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிடுவார்கள் மற்றும் பதக்க அட்டவணையில் சேர்க்கப்பட மாட்டார்கள்.

இது தவிர அனைத்து உத்தியோகபூர்வ நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் போது இரு நாட்டு வீரர்கள் மற்றும் பிரதிநிதிகளும் தங்கள் சீருடையில் அனைத்து தேசிய சின்னங்கள் மற்றும் கொடிகளை அகற்ற அல்லது மறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.