பதுளைப் பகுதியின் ஒலியாமண்டி என்ற இடத்தில் பூஜைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரின் கை துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி துண்டிக்கப்பட்ட கையை, மீளவும், சம்மந்தப்பட்டவருக்கு பொறுத்த, பதுளை அரசினர் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பதுளைப் பகுதியின் உடுவரை பெருந்தோட்டத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ராஜரட்ணம் சத்யஜீவன் என்ற நபர், தோட்டத்தை விட்டு வெளியேறி, பதுளை ஒலியாமண்டி என்ற இடத்தில் வாடகை வீடொன்றில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில். கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு பூஜை வழிபாட்டிற்குச் சென்று, முச்சக்கரவண்டியில் ஒலியாமண்டியில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இதன்போது, அவர் சென்ற முச்சக்கரவண்டியை வழி மறித்து நிறுத்திய ஐவர், ராஜரட்ணம் சத்யஜீவனைப் பிடித்து, அவரது கையை வாலொன்றினால் துண்டித்து விட்டு, குறித்த முச்சக்கரவண்டியிலேயே தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவசர இலக்கத்திற்கு தொடர்புகொண்டு, அம்புயூலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, துண்டிக்கப்பட்ட கையுடன், பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து துண்டிக்கப்பட்ட கையை, அந்நபருக்கு இணைக்க, பதுளை அரசினர் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினையே, இச் சம்பவத்திற்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் இனம் காணப்பட்டிருந்த போதிலும், அவர்கள் பிரதேசத்தை விட்டு, தலைமறைவாகியுள்ளதாகவும், விரைவில் குறித்த ஐவரும் கைது செய்யப்படுவார்களென்றும், பொலிசார் தெரிவித்தனர்.
பதுளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுஜீவகுமார தலைமையிலான குழுவினர், மேற்படி சம்பவம் குறித்து, தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM