மெல்போர்னில் வசிக்கும் 24 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவருக்கு நேற்று ( 2, மார்ச், 2022) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 இணையவழி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்காக குறித்த நபருக்கு 13 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வற்புறுத்தி, தங்களைப் பற்றிய வெளிப்படையான பாலியல் படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு வலியுறுத்தி அந்தரங்க தகவல்களை சந்தேக நபர் பெற்றுள்ளார்.
பின்னர் தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால் பெறப்பட்ட அந்தரங்க தகவல்களை பாதிக்கப்பட்ட சிறுமிகளது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவேன் என்று அச்சுறுத்தல் விடுத்து, பரிமாற்றமும் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள் 2020 செப்டெம்பர் 11 அன்று சந்தேக நபரை பல இணையவழி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்காக கைதுசெய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM