தலைமன்னார் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் மீட்பு

By T Yuwaraj

03 Mar, 2022 | 12:15 PM
image

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகளை இராணுவத்தினர் இன்று வியாழக்கிழமை (3) அதிகாலை மீட்டுள்ளனர்.

மன்னார் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நடுக்குடா இராணுவத்தினரின் உதவியுடன் இன்று வியாழக்கிழமை (3) அதிகாலை நடுக்குடா காட்டுப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்ட போது ஒரு தொகுதி மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டது.

சோதனையின் போது குறித்த மாத்திரைகள் உடல் வலியை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் என தெரிய வந்துள்ளதோடு, குறித்த இரு பெட்டிகளில் இருந்து 60 ஆயிரம் மாத்திரைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மாத்திரைகள் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது.எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மீட்கப்பட்ட மாத்திரைகளை மேலதிக நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆட்சியாளர்கள் சிலரின் ஊழல்மோசடிகளே நாட்டின் வங்குரோத்து...

2022-09-28 22:41:33
news-image

முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு...

2022-09-28 15:26:39
news-image

மக்களின் பாதுகாப்புக் கருதியே உயர் பாதுகாப்பு...

2022-09-28 22:40:01
news-image

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலன்கள்...

2022-09-28 22:37:03
news-image

கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு...

2022-09-28 22:58:06
news-image

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

2022-09-28 22:35:17
news-image

காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல்...

2022-09-28 22:59:43
news-image

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும்...

2022-09-28 21:55:54
news-image

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

2022-09-28 22:42:45
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-28 23:03:37
news-image

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம்...

2022-09-28 16:55:34
news-image

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும்...

2022-09-28 16:53:31