10 பத்து இலட்சம் பேர் அகதிகளாக உக்ரேனிலிருந்து வெளியேற்றம் - ஐ.நா

03 Mar, 2022 | 12:32 PM
image

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போருக்குப் பின்னர் உக்ரேனிலிருந்து பத்து இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

A man waits for the arrival of the train in in eastern Ukraine city of Lisichansk on Thursday as resident fled their homes and headed to West following Russia's invasion

ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரேனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது.

இதனால் உயிரை காத்துக்கொள்வதற்காக உக்ரேன் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

A local resident walks past a destroyed military vehicle, as Russia's invasion of Ukraine continues, in the town of Bucha in the Kyiv region, Ukraine March 1, 2022

ஒரு வாரத்திற்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

மேலும் 40 இலட்சம் மக்கள் உக் ரேனை விட்டு வெளியேறக்கூடும் என்று கணித்துள்ளது, ஆனால் அந்த கணிப்பு அதிகரிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.

Ukrainians board Kyiv-bound train near Donetsk in eastern Ukraine as Russian forces stormed across the border

அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையளர் பிலிப்போ கிராண்டியின் டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"ஏழு நாட்களில் உக்ரைனில் இருந்து பத்து இலட்சம் அகதிகள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

One million flee Ukraine in under a week amid war: UN refugee agency- The  New Indian Express

உக்ரைன் அகதிகளில் அதிகபட்சமாக சுமார் 4.54 இலட்சம் பேர் போலந்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஹங்கேரியில் 1.16 இலட்சத்தினரும், மோல்டோவாவில் 79 ஆயிரம் பேரும், ஐரோப்பிய நாடுகளுக்கு 69 ஆயிரம் பேரும், சுலோவாக்கியாவில் 67 ஆயிரம் பேரும் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

People waiting for a Kyiv-bound train walk to a platform in Kramatorsk, the Donetsk region, eastern Ukraine

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அகதிகள் வெளியேற்றமாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது முன்னதாக 2011 இல் சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த போது 56 இலட்சம் மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

2025-11-08 15:33:48
news-image

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை...

2025-11-08 14:08:37
news-image

இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் குண்டுவெடிப்பு ;...

2025-11-08 12:50:02
news-image

காணியை விற்ற பணத்தில் மருத்துவம் படிக்க...

2025-11-08 12:47:57
news-image

நான் இந்தியாவுக்குச் செல்வேன் - ட்ரம்ப்...

2025-11-07 16:00:42
news-image

தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டி -...

2025-11-07 15:27:34
news-image

கல்மேகி புயலின் தாக்கம் - பிலிப்பைன்ஸ்,...

2025-11-07 14:10:04
news-image

கல்மேகி புயலில் சிக்கி பிலிப்பைன்ஸில் உயிரிழந்தவர்களின்...

2025-11-07 13:42:55
news-image

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும்...

2025-11-07 12:38:54
news-image

ஒரு குழந்தையின் தாய் எறும்பு பயத்தால்...

2025-11-07 03:11:10
news-image

மெக்சிக்கோ ஜனாதிபதியிடம் அத்துமீறி முத்தமிட முயன்ற...

2025-11-06 13:32:30
news-image

"நிறைய இழக்க நேரிடும்" - மம்தானிக்கு...

2025-11-06 13:29:51