இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமரர் கல்கி எழுதிய புதினம் 'பொன்னியின் செல்வன்'. லட்சக்கணக்கான வாசகர்களால் வாசிக்கப்பட்ட இந்த சரித்திர நாவலைத் தழுவி இயக்குநர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' என்ற பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை உருவாக்குகிறார்.
இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் லைகா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத, ரவி வர்மன் ஒளிப்பதிவை கவனிக்க, 'ஆஸ்கார் நாயகன்' ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
அண்மையில் இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா ஆகியோர்களின் கதாபாத்திர தோற்றப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
அத்துடன் அப் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் நடிகர் விக்ரமும், நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருள்மொழிவர்மன் வேடத்தில் ஜெயம் ரவியும், வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தியும், குந்தவி தேவி வேடத்தில் நடிகை திரிஷாவும் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு ரசிகர்களக் கடந்து திரை ஆர்வலர்களிடத்திலும் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM