கல்விப் பொதுத்தராதர சாதாரண தர  அழகியல் பாடங்களின் பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும் என  பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் நடாத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக இந்தப் பாடங்களின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன குறிப்பிட்டார்.

இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை இறுதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை மார்ச் மாதம் 5ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் பெப்ரவரி 27ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.